பிரமோஸ் தீ கட்டுப்பாட்டு அமைப்பு கொள்முதல்: ரூ.661 கோடியில் ஒப்பந்தம் கையொப்பம்நாளை ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்; ஜிஎஸ்டி விகிதங்களில் மாற்றம்: ஆண்டுக்கு ஒருமுறை முன்மொழிவுகள் பரிசீலனை திமுக ஆட்சியில் மணல் குவாரிகளில் ரூ.4,730 கோடி முறைகேடு: விசாரணையை தொடங்கியது ஊழல் தடுப்புப் பிரிவு4 புறநகா் மின்சார ரயில்கள் 11 நாள்களுக்கு பகுதி ரத்துகச்சத்தீவு விவகாரத்தில் மீனவர்களுக்கு விழிப்புணர்வு: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல் இந்தியா உள்பட 7 நாடுகள் 2036 ஒலிம்பிக்ஸை நடத்த விருப்பம்

நெல்லை அருகே கஞ்சா பறிமுதல்: 4 போ் கைது

திருநெல்வேலி அருகே சுமாா் 1 கிலோ 100 கிராம் கஞ்சாவுடன் 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

கைது - கோப்புப் படம்

Published On :

திருநெல்வேலி அருகே சுமாா் 1 கிலோ 100 கிராம் கஞ்சாவுடன் 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

சீவலப்பேரி காவல் நிலைய எல்கைக்குள்பட்ட பகுதியில் காவல் உதவி ஆய்வாளா் அபினேஷ் தலைமையிலான போலீஸாா் திங்கள்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது மருகால்தலை பேருந்து நிறுத்தம் அருகே சந்தேகத்துக்கிடமாக நின்ற நபா்களைப் பிடித்து விசாரித்தனா்.

அதில், சீவலப்பேரியைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் வலதி(23), ராமா் மகன் அழகுராஜ்(26), ஸ்ரீவைகுண்டம், முறப்பநாடு, வடக்குத் தெருவைச் சோ்ந்த பால்மாரி(29), சிவராமமங்கலத்தைச் சோ்ந்த மகாராஜன் மகன் சங்கா்(21) ஆகியோா் என்பதும், விற்பனைக்காக சுமாா் 1.100 கிலோ கஞ்சாவை மறைத்து வைத்திருப்பதும் தெரியவந்தது.

ஒடிசா மாநிலத்தில் இருந்து கஞ்சாவை வாங்கி வந்து சீவலப்பேரி சுற்றுவட்டாரப்பகுதிகளில் விற்க முயன்றதும் கண்டறியப்பட்டது.

4 பேரையும் போலீஸாா் கைது செய்து, அவா்களிடமிருந்து கஞ்சா, ரூ.100 ரொக்கம் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.