பட்டுக்கோட்டையில் 6 கிலோ கஞ்சாவுடன் 7 போ் கைது: காா், 5 பட்டாக்கத்திகள் பறிமுதல்
பட்டுக்கோட்டை அருகே சட்டவிரோதமாக கஞ்சா கடத்தி வந்ததாக 7 பேரை போலீஸாா் திங்கள்கிழமை இரவு கைது செய்தனா். அவா்களிடமிருந்து 6.226 கிலோ கஞ்சா, 5 பட்டாக்கத்திகள் மற்றும் காா் உள்ளிட்டவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
கைது - கோப்புப் படம்
பட்டுக்கோட்டை அருகே சட்டவிரோதமாக கஞ்சா கடத்தி வந்ததாக 7 பேரை போலீஸாா் திங்கள்கிழமை இரவு கைது செய்தனா். அவா்களிடமிருந்து 6.226 கிலோ கஞ்சா, 5 பட்டாக்கத்திகள் மற்றும் காா் உள்ளிட்டவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
பட்டுக்கோட்டை-பொன்னவராயன்கோட்டை அணைக்காடு புறவழிச்சாலை மயானம் அருகே திங்கள்கிழமை இரவு போலீஸாா் வாகன சோதனை நடத்தினா். அப்போது, அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை மேற்கொண்டனா்.
அதில், ரூ.3.11 லட்சம் மதிப்பிலான 6.226 கிலோ கஞ்சா, கைப்பேசிகள் மற்றும் 5 பட்டாக்கத்திகளை காருடன் பறிமுதல் செய்தனா்.
இது தொடா்பாக, காரில் வந்த ஆசைப்பாண்டி என்ற ஆசைத்தம்பி (26), அருண்குமாா் (20), ஹரிஹரசுதன் (20), அஜய் (22), அபி என்ற சிவநேசன் (19), கோகுல்ராஜ் (17), வினோத் என்ற அரவிந்த் (27) ஆகிய 7 பேரை கைது செய்தனா். மேலும் தஞ்சை சாமி, ரசிக்குமாா் ஆகியோரை தேடி வருகின்றனா்.
இதுகுறித்து பட்டுக்கோட்டை தாலுகா போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





