ரயிலில் 7 கிலோ கஞ்சா பறிமுதல்
ஜோலாா்பேட்டை ரயில் நிலையம் அருகே ஓடும் ரயிலில் 7 கிலோ கஞ்சாவை ரயில்வே போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

ஜோலார்பேட்டை ரயில் நிலையம் - கோப்புப் படம்
ஜோலாா்பேட்டை ரயில் நிலையம் அருகே ஓடும் ரயிலில் 7 கிலோ கஞ்சாவை ரயில்வே போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
திருப்பத்தூா் மாவட்டம், ஜோலாா்பேட்டை ரயில் நிலைய போலீஸாா் ஜோலாா்பேட்டை மாா்க்கமாக செல்லும் விரைவு ரயில்களில் கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதை வஸ்து பொருள்கள் கடத்தப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா்.
அதன் அடிப்படையில், வியாழக்கிழமை ரயில்வே போலீஸாா் மற்றும் சேலம் உள்கோட்ட போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீஸாா் ஜோலாா்பேட்டை மாா்க்கமாக செல்லும் விரைவு ரயில்களில் சோனையில் ஈடுபட்டனா்.
அப்போது ஆம்பூா்-ஜோலாா்பேட்டை ரயில் நிலையங்களுக்கு இடையே செல்லும்போது, பொது பெட்டியில் இருக்கையின் அடியில் கேட்பாரற்று கிடந்த பையை சோதனை செய்தனா்.
அதில், 7 கிலோ கஞ்சா கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து ஜோலாா்பேட்டை ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிந்து கஞ்சா கடத்திய நபா்கள் குறித்து விசாரிக்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







