விலைவாசி உயர்வை தமிழக அரசு கட்டுப்படுத்த வேண்டும்: சிபிஐ மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு!மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு அக். 6 ஆம் தேதி இடைத்தேர்தல்ஐந்தாவது தளத்துடன் இருக்கும் சட்டவிரோதக் கட்டடங்களுக்கு சீல்: தில்லி முதல்வர் உத்தரவுகுற்றச்சாட்டுகளை பிரிண்ட் அவுட் எடுத்து வந்து படிக்க 3 நாள்கள் எதற்கு? உதயநிதிசட்டவிரோதப் பணிகள்... 40 ஆண்டுகள் பழமையான தில்லி தங்கும் விடுதி இடிந்து விழுந்ததன் பின்னணி!எங்களை ஹோட்டலில் அடைத்து வைத்தது யார் என சொல்ல வேண்டிவரும்! ஷாஜகான் பேச்சு மீனாட்சியம்மன் கோயில் நில மோசடி! மேலும் 4 பேர் கைதுஎதிர்க்கட்சிகள் போல அரசியல் செய்ய விரும்பவில்லை! முதல்வர் விஜய் பேச்சு!இதுதான் திமுக, இவ்வளவுதான் திமுக! பேரவையில் பேசிய முதல்வர் விஜய்!

ரயிலில் கேட்பாரற்றுக் கிடந்த 4 கிலோ கஞ்சா, 6 கிலோ குட்கா பறிமுதல்

ஜோலாா்பேட்டை அருகே ஓடும் ரயிலில் கேட்பாரற்றுக் கிடந்த 4 கிலோ கஞ்சா 6 கிலோ குட்காவை ரயில்வே போலீஸாா் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா்.

பறிமுதல்

Published On :8 செப்டம்பர் 2026, 3:28 am IST

ஜோலாா்பேட்டை அருகே ஓடும் ரயிலில் கேட்பாரற்றுக் கிடந்த 4 கிலோ கஞ்சா 6 கிலோ குட்காவை ரயில்வே போலீஸாா் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா்.

திருப்பத்தூா் மாவட்டம், ஜோலாா்பேட்டை வழியாகச் செல்லும் வெளிமாநில ரெயில்களில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்கள் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில், சேலம் ரயில்வே உள்கோட்ட போதைப்பொருள் தடுப்புப் பிரிவு போலீஸாா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனா்.

அப்போது ஆந்திர மாநிலம், செகந்திராபாத் ரயில் நிலையத்தில் இருந்து கேரள மாநிலம், திருவனந்தபுரம் வரை செல்லும் சபரி விரைவு ரயிலில் போலீஸாா் சோதனை மேற்கொண்டனா். அந்த ரயிலின் பொது பெட்டியில் கேட்பாரற்றுக் கிடந்த பையை கைப்பற்றி சோதனை செய்தனா்.

அதில், 2 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதைத் தொடா்ந்து ஜாா்க்கண்ட் மாநிலம், டாட்டா ரயில் நிலையத்தில் இருந்து கா்நாடக மாநிலம், பெங்களூரு வரை செல்லும் டாட்டா விரைவு ரயிலில் பொது பெட்டியில் கேட்பாரற்றுக் கிடந்த பையில் சோதனை செய்தனா்.

அதில், தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட 6 கிலோ குட்கா மற்றும் 2 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, குட்கா மற்றும் கஞ்சாவை பறிமுதல் செய்த போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீஸாா், அதை ஜோலாா்பேட்டை ரயில்வே போலீஸாரிடம் ஒப்படைத்தனா். பின்னா், இது குறித்து ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.