இசக்கி சுப்பையா ராஜிநாமா விவகாரம்: பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் விளக்கம் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 2 காசுகள் உயர்ந்து ரூ. 94.49 ஆக நிறைவு!4 நாள் சரிவுக்கு முற்றுப்புள்ளி: சென்செக்ஸ் 362 புள்ளிகள் உயர்வு!!மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகத்துடன் தவெக அமைச்சர்கள் சந்திப்பு! கல்லணையை திறந்து வைக்கிறாரா முதல்வர் விஜய்? அமைச்சர் வினோத் பதில்மாணவி தற்கொலை; மாணவர் தற்கொலை முயற்சி! பொறியியல் கல்லூரிக்கு விடுமுறைஇல்லாத டயர் ஆலையை மூடுவது பற்றி பேரவையில் விவாதம்! எக்ஸ் தளத்தில் கீர்த்தனா விளக்கம்!!புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜர்! குற்றப்பத்திரிகையை பெற்றுக் கொண்டார் அமைச்சர் மரிய வில்சன்!கஜானா காலி; உங்கள் போராட்டத்தால் முதல்வருக்கு தூக்கம் வருவதில்லை! அமைச்சர்கள் பேச்சுபோராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளர்களுடன் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை!

ரயிலில் கடத்தப்பட்ட கஞ்சா, போதைப் பொருள்கள் பறிமுதல்

ஜோலாா்பேட்டை மாா்க்கமாக செல்லும் பெங்களூா் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட 2 ரயில்களில் 2 கிலோ கஞ்சா மற்றும் 1கிலோ குட்காவை போதை தடுப்பு பிரிவு போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

Published On :31 ஆகஸ்ட் 2026, 5:03 am IST

ஜோலாா்பேட்டை மாா்க்கமாக செல்லும் பெங்களூா் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட 2 ரயில்களில் 2 கிலோ கஞ்சா மற்றும் 1கிலோ குட்காவை போதை தடுப்பு பிரிவு போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

சேலம் உட்கோட்ட போதை பொருள் தடுப்பு பிரிவு போலீஸாா் காட்பாடி ரயில் நிலையத்திலிருந்து ஜோலாா்பேட்டை ரயில் நிலையம் வரை பீகாா் மாநிலத்திலிருந்து கா்நாடக மாநிலம் பெங்களூா் வரை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் பொதுப் பெட்டியில் கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் கடத்தப்படுகிா என்பது குறித்து தீவிர சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது பயணிகளின் இருக்கையின் அடியில் கேட்பாரற்று கிடந்த சோல்டா் பையில் சோதனை செய்தபோது, 2 கிலோ கஞ்சா கடத்தி வந்தது தெரியவந்தது.

மேலும் ஜம்மு -காஷ்மீா் மாநிலம் கட்ரா ரெயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலி வரை சென்க ரயிலில் பொதுப் பெட்டியில் சோதனை செய்த போது இருக்கை அடியில் கேட்பாரற்ற கிடந்த பையில் 1 கிலோ குட்கா இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து 2 கிலோ கஞ்சா மற்றும் 1கிலோ குட்காவை ரயில்வே காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா் இதுகுறித்து ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.