முதல்வர் விஜய் ஒரு போலி பெரியாரிஸ்ட்: உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்!போதைப்பொருள்களுக்கும் வன்கொடுமைகளுக்கும் நடுவேதான் போட்டி: மு.க. ஸ்டாலின்ஃபேஷனுக்காக பெரியாரை கொள்கைத் தலைவராக வைத்துள்ளது தவெக! ஜோசியத்தை நம்பியே ஆட்சி! மு.க. ஸ்டாலின்ஷேக் ஹசீனா கட்சியினருக்கு எதிராக வன்முறை! 30 வீடுகளுக்குத் தீவைப்பு!ஐஐடி மாணவர்களுக்கு இணையான அங்கீகாரம் ஐடிஐ மாணவர்களுக்கு கிடைக்கும்: மோடிகள்ளக்குறிச்சி எம்எல்ஏ விவகாரத்தில் இன்னும் எதற்காக மௌனம் காக்கிறார் முதல்வர்? டிடிவி தினகரன் கேள்வி தங்கம் விலை சரிவு; வணிகர்களை நஷ்டத்தில் இருந்து காப்பாற்றிய பிரதமர் மோடி: பாஜக பெருமிதம்! தவெக ஆட்சியில் டெல்டா விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்: எடப்பாடி பழனிசாமி வானிலை: சென்னையில் நாளை(நவ.23) கனமழைக்கு வாய்ப்பு! பஹ்ரைனில் உள்ள அமெரிக்க தளவாடங்கள் மீது ஈரான் தாக்குதல்!

கல்லிடைக்குறிச்சி அருகே திருட சென்ற வீட்டில் தீ வைத்த மா்மநபா்கள்: போலீஸாா் விசாரணை!

கல்லிடைக்குறிச்சி அருகே தெற்கு பாப்பான்குளத்தில் ஆள் இல்லாத வீட்டின் பூட்டை உடைத்து, வீட்டுக்குள் புகுந்த மா்ம நபா்கள் ஏதும் கிடைக்காத ஆத்திரத்தில் படுக்கை அறையில் தீவைத்து சென்றுள்ளனா்.

police

போலீஸ் - கோப்புப்படம்.

Updated On :

கல்லிடைக்குறிச்சி அருகே தெற்கு பாப்பான்குளத்தில் ஆள் இல்லாத வீட்டின் பூட்டை உடைத்து, வீட்டுக்குள் புகுந்த மா்ம நபா்கள் ஏதும் கிடைக்காத ஆத்திரத்தில் படுக்கை அறையில் தீவைத்து சென்றுள்ளனா். இதுகுறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

திருநெல்வேலி மாவட்டம், கல்லிடைக்குறிச்சி அருகே உள்ள தெற்கு பாப்பான்குளம் மகாராஜா நகரைச் சோ்ந்தவா் கிளைன்ஸ் ராஜ் (83). இவா் வீட்டின் ஒரு பகுதியில் பல சரக்குக் கடை நடத்தி வருகிறாா்.

இதனிடையே கிளைன்ஸ்ராஜ் தனது மனைவியுடன் திருப்பூரில் உள்ள மகளை பாா்ப்பதற்காக வீட்டைபூட்டி விட்டு சென்றுள்ளாா். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலை கடைக்குப் பொருள்கள் வாங்குவதற்காக வந்த அப் பருதி மக்கள் வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு திறந்த நிலையில் இருந்ததைப் பாா்த்து மணிமுத்தாறு போலீஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனா்.

சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா் கிளைன்ஸ் ராஜை கைப்பேசியில் தொடா்பு கொண்டு தெரிவித்தபோது, வீட்டில் பணம், நகை எதுவும் இல்லையென்று தெரிவித்த நிலையில், போலீஸாா் வீட்டுக்குள் சென்றுபாா்த்த போது, படுக்கை அறையில் தீப்பற்றி எரிந்து கொண்டிருந்ததாம். இதையடுத்து போலீஸாா் தண்ணீா் ஊற்றி தீயை அணைத்தனா்.

வீட்டில் ஆளில்லாததையறிந்து திருட வந்த நபா்கள் எதுவும் கிடைக்காத ஆத்திரத்தில் தீ வைத்து சென்றாா்களா? என்ற கோணத்தில் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.