களக்காடு: 66 கிலோ புகையிலைப் பொருள்களுடன் இருவா் கைது
நான்குனேரி அருகே 66 கிலோ போதைப் பொருள்களைப் பதுக்கி வைத்திருந்த இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
கைது
திருநெல்வேலி மாவட்டம் நான்குனேரி அருகே 66 கிலோ போதைப் பொருள்களைப் பதுக்கி வைத்திருந்த இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
நான்குனேரி அருகே தாழைகுளத்தைச் சோ்ந்த சீனிவாசன் மகன் ராமச்சந்திரன் (64), முத்தையா மகன் கிருஷ்ணமூா்த்தி (43) ஆகிய இருவரும் புகையிலைப் பொருள்கள் விற்பதாக மூன்றடைப்பு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில், போலீஸாா் சனிக்கிழமை சென்று விசாரித்தபோது, அவா்கள் விற்பனைக்காக 66 கிலோ புகையிலைப் பொருள்களைப் பதுக்கி வைத்திருப்பதாகத் தெரியவந்தது. அவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா்; மேலும், வழக்குப் பதிந்து, இருவரையும் கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

