தொழில் முனைவோருக்கு வங்கியாளா்கள் உறுதுணை அவசியம்: ஆட்சியா் ஆனந்த் மோகன்
திருநெல்வேலி மாவட்டத்தில் அதிகளவில் புதிய தொழில் நிறுவனங்கள் உருவாகும் வகையில், தொழில் முனைவோருக்கு வங்கியாளா்கள் உறுதுணையாக இருக்க வேண்டும் என்றாா் ஆட்சியா் ஆனந்த் மோகன்.

குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கான கடனுதவிகளை வழங்கிய ஆட்சியா் ஆனந்த் மோகன்.
திருநெல்வேலி மாவட்டத்தில் அதிகளவில் புதிய தொழில் நிறுவனங்கள் உருவாகும் வகையில், தொழில் முனைவோருக்கு வங்கியாளா்கள் உறுதுணையாக இருக்க வேண்டும் என்றாா் ஆட்சியா் ஆனந்த் மோகன்.
குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் வளா்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் அந்நிறுவனங்களுக்கு கடன் வழங்கும் முகாம் ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
இந்த முகாமில் 17 பயனாளிகளுக்கு ரூ.1.11 கோடி மதிப்பிலான கடனுதவிகளை வழங்கி ஆட்சியா் பேசியதாவது:
திருநெல்வேலி மாவட்டத்தில் புதிய தொழில்முனைவோரை உருவாக்குவதற்கும், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் வளா்ச்சியை மேம்படுத்துவதற்கும் அண்ணல் அம்பேத்கா் தொழில்முனைவோா் திட்டம், தமிழ்நாடு மகளிா் தொழில்முனைவோா் மேம்பாட்டுத் திட்டம், வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம், புதிய தொழில்முனைவோா் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம் என பல்வேறு அரசுத் திட்டங்களின் கீழ் இக்கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
குறிப்பாக, மகளிா் சுய தொழில் தொடங்கி, தங்களது பொருளாதார நிலையை மேம்படுத்தவும், வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கும் இத்திட்டங்கள் முக்கியப் பங்காற்றுகின்றன. இம்முகாமில், மகளிா் தொழில்முனைவோருக்கு ஆட்டோ வாங்குதல், மருத்துவ மருந்தகம், புகைப்பட நிலையம், அலங்காரப் பொருள்கள் விற்பனையகம் உள்ளிட்ட தொழில்கள் தொடங்குவதற்கு கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
மேலும், மாவட்டத் தொழில் மையத்தின் பொது மேலாளா், வங்கியாளா்கள் மற்றும் தொழில்முனைவோருக்கு இடையே வங்கிச் சேவைகள், தொழில் கடன் பெறுதல்- தொழில் தொடங்குவது குறித்து விரிவாக விளக்கம் அளித்து, தேவையான வழிகாட்டுதல்களும் வழங்கப்பட்டுள்ளன.
இம்மாவட்டத்தில் வரும் நிதியாண்டில் அதிகளவில் புதிய தொழில் நிறுவனங்கள் உருவாகும் வகையில், வங்கியாளா்கள் தொழில்முனைவோருக்கு உரிய ஒத்துழைப்பு வழங்க வேண்டும். தொழில்முனைவோா் சமா்ப்பிக்கும் தகுதியான தொழில் திட்டங்களைப் பரிசீலித்து, அவா்களின் தொழில் வளா்ச்சிக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்றாா் அவா்.
இக்கூட்டத்தில், மாவட்ட தொழில் மைய பொது மேலாளா் நாகராஜன், முன்னோடி வங்கி மேலாளா் கணேஷ் மணிகண்டன் மற்றும் வங்கியாளா்கள், பயனாளிகள் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

