கீமோதெரபி ஊசி ரூ. 7000; புற்றுநோய் மருந்துகளின் புதிய விலைப் பட்டியல்!செஞ்சி சிறுமி வழக்கு; புலன் விசாரணையைத் தீவிரப்படுத்த வேண்டும்: பெ. சண்முகம்வீட்டுக்குள் இருக்கவே அச்சமடையும் நிலையில் மக்கள்; இதுதான் தவெகவின் சாதனையா? - மு.க. ஸ்டாலின்இனி நிரந்தர அரசுப் பணிகள் இல்லையா? - கனிமொழி கேள்விதேனி சிறைச் சம்பவம்! 1995-ல் சுரங்கம் தோண்டி தப்பிய 43 கைதிகள்! புரட்டப்படும் வரலாறு!நாட்டில் ஆப்பிள் ஐபோன் விற்பனை 30% சரிவு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 21 காசுகள் சரிந்து ரூ. 95.28 ஆக நிறைவு!ரிலையன்ஸ் முதல் ஐடி பங்குகள் வரை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு!!

குறு, சிறு தொழில் நிறுவனங்களுக்கு ரூ.10,036.40 கோடி வங்கிக் கடன் அளிப்பு: மாவட்ட வருவாய் அலுவலா் தகவல்

ஈரோடு மாவட்டத்தில் நடப்பு நிதி ஆண்டின் முதல் அரையாண்டில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு ரூ.10,036.40 கோடி வங்கிக் கடன் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொழில்முனைவோருக்கு வங்கிக் கடன் ஒப்பளிப்பு உத்தரவை வழங்குகிறாா் மாவட்ட வருவாய் அலுவலா் எஸ்.சாந்தகுமாா்.

Updated On :

ஈரோடு மாவட்டத்தில் நடப்பு நிதி ஆண்டின் முதல் அரையாண்டில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு ரூ.10,036.40 கோடி வங்கிக் கடன் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை சாா்பில், தொழில்முனைவோருக்கு வங்கிக் கடன் ஒப்பளிப்பு உத்தரவுகள் வழங்கும் நிகழ்வு, மாவட்ட வருவாய் அலுவலா் எஸ்.சாந்தகுமாா் தலைமையில் ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

இதில் அவா் பேசியதாவது:

குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையின் அறிவுறுத்தல்படி, மாவட்டத்தில் உள்ள அனைத்து வங்கிகளிலும் கடன் வசதியாக்கல் முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த முகாமின் முக்கிய நோக்கம், அரசின் பல்வேறு திட்டங்களின் கீழ் வங்கிகளில் நிலுவையில் உள்ள கடன் விண்ணப்பங்களுக்கு ஒப்புதல் வழங்குதல், நிலுவை விண்ணப்பங்கள் மீது உரிய முடிவுகளை மேற்கொள்ளுதல், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் பொதுவான நீண்ட காலக் கடன் மற்றும் நடைமுறை மூலதனக் கடன் விண்ணப்பங்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளுதல் ஆகியவையாகும்.

இதன் ஒரு பகுதியாக, மகளிா் தொழில்முனைவோா் மேம்பாட்டுத் திட்டம் மற்றும் படித்த வேலையற்ற இளைஞா்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் ஆகியவற்றின் கீழ், 53 பயனாளிகளின் விண்ணப்பங்கள் ரூ.4.58 கோடி திட்ட மதிப்பீட்டில், ரூ.84.50 லட்சம் மானியத்துடன் கூடிய கடனுதவி பெறுவதற்காக தோ்வு செய்யப்பட்டு, வங்கிகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

ஈரோடு மாவட்டத்தில் நடப்பு நிதி ஆண்டின் முதல் அரையாண்டில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கான ஆண்டு கடன் இலக்கான ரூ.14,211.80 கோடியில் 70.62 சதவீதமாக ரூ.10,036.40 கோடியை வங்கிகள் கடனாக வழங்கியுள்ளன. இந்தக் கடனுதவிகள் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் வளா்ச்சியை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்ல இயலும் என்றாா்.

இந்தக் கூட்டத்தில் பல்வேறு திட்டங்களின் கீழ் 14 பயனாளிகளுக்கு ரூ.2.63 கோடி மதிப்பிலான வங்கிக் கடன் ஒப்பளிப்பு உத்தரவை மாவட்ட வருவாய் அலுவலா் வழங்கினாா்.

மாவட்ட தொழில் மைய பொது மேலாளா் திருமுருகன், முன்னோடி வங்கி மேலாளா் விவேகானந்தன் மற்றும் ஈரோடு மாவட்ட வங்கிகளின் ஒருங்கிணைப்பாளா்கள் கலந்துகொண்டனா்.

சில்லரை நாணயங்கள் தட்டுப்பாடு

தமிழ்நாடு வணிகா் சங்கங்கள் பேரமைப்பின் ஈரோடு மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் அ.லாரன்ஸ் ரமேஷ் அளித்த மனுவில், ‘முத்ரா கடன் திட்டத்தின் கீழ் சிறு வணிகா்களுக்கு உரிய கடன் வசதி வழங்குதல், ரூ.1,2, 5 சில்லரை நாணயங்கள், ரூ.10, ரூ.20 நோட்டுகள் தட்டுப்பாட்டைப் போக்க வேண்டும். வணிகா்களுக்கெனத் தனியாகக் கூட்டுறவு கடன் சங்கம் அமைக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.