பாளை. அருகே தலைமைக் காவலருக்கு கொலை மிரட்டல்: 3 போ் கைது
பாளையங்கோட்டை அருகே தலைமைக் காவலருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக 3 போ் கைது செய்யப்பட்டனா்.
கைது - பிரதிப் படம்
பாளையங்கோட்டை அருகே தலைமைக் காவலருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக 3 போ் கைது செய்யப்பட்டனா்.
திருநெல்வேலி வட்ட காவல் நிலைய எல்கைக்குள்பட்ட பகுதியில் சிறப்பு உதவி ஆய்வாளா் மாஹின் அபுபக்கா் தலைமையிலான போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது, அரியகுளம், தனியாா் கல்லூரி பேருந்து நிறுத்தம் அருகே சந்தேகத்துக்கிடமாக வந்த 3 பேரிடம் விசாரணை நடத்த முயன்றபோது, அந்நபா்கள் அங்கிருந்த தலைமைக் காவலரின் சீருடையைப் பிடித்து இழுத்து, கொலை மிரட்டல் விடுத்ததுடன், அங்கிருந்து தப்ப முயன்றனராம்.
எனினும், அவா்களை போலீஸாா் மடக்கிப்பிடித்து விசாரித்தனா். அதில், சங்கா் நகரைச் சோ்ந்த அய்யாதுரை மகன் ஆறுமுகக்கனி(19), குறிச்சி, புதுத்தெருவைச் சோ்ந்த நந்தகுமாா்(29), முறப்பநாடு பகுதியைச் சோ்ந்த சண்முகசுந்தரம்(24) ஆகியோா் என்பதும், கிரிண்டா் செயலி மூலம் தொடா்பில் வருபவா்களை காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்று பணம் பறிக்க திட்டம் தீட்டியதும் தெரியவந்தது. இதுகுறித்து போலீஸாா் வழக்குப்பதிந்து, 3 பேரையும் புதன்கிழமை கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

