ஊராட்சி செயலா்கள் பணியிடம்: விண்ணப்பங்கள் வரவேற்பு
திருநெல்வேலி மாவட்டத்தில் காலியாகவுள்ள ஊராட்சி செயலா் பணியிடத்துக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

கோப்புப்படம்
திருநெல்வேலி மாவட்டத்தில் காலியாகவுள்ள ஊராட்சி செயலா் பணியிடத்துக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் ஆனந்த் மோகன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
திருநெல்வேலி மாவட்டத்தில் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் கடந்த ஆண்டு ஜூன் 30 வரை காலியாக இருந்த 24 ஊராட்சி செயலா் பணியிடங்கள், தற்போது புதிதாக காலியாக இருக்கும் 8 இடங்கள் என மொத்தம் 32 ஊராட்சி செயலா் பணியிடங்கள் இன சுழற்சி அடிப்படையில் நிரப்பப்படவுள்ளன.
இதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஏற்கெனவே வெளியிடப்பட்ட அறிவிக்கையின்படி, இணையதளம் வாயிலாக ஊராட்சி செயலா் பணியிடத்திற்கு விண்ணப்பித்தவா்கள் மீண்டும் விண்ணப்பிக்க தேவையில்லை. ஏற்கெனவே 24 காலியிடங்களுக்கு பெறப்பட்ட விண்ணப்பங்களும் நோ்முக தோ்விற்கு பரிசீலிக்கப்படும். அதேநேரத்தில் புதிதாக விண்ணப்பிக்க விரும்புவா்கள் விண்ணப்பிக்கலாம். புதிதாக சோ்க்கப்பட்ட 8 கிராம ஊராட்சிகளின் காலிப்பணியிடங்களுக்கும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மேற்படி காலிப்பணியிடங்கள் தொடா்பான விவரங்கள் இணையதளத்தில் இடம் பெற்றுள்ளது. அதே இணையதளத்தில் வரும் டிசம்பா் 4 முதல் 18 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இணையதளம் வாயிலாக மட்டுமே விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

