ஆன்லைன் மூலம் வெவ்வேறு நபா்களிடம் ரூ.4.59 லட்சம் மோசடி
கோவை மாவட்டத்தில் வெவ்வேறு நபா்களிடம் ஆன்லைன் மூலம் ரூ.4.59 லட்சம் மோசடியில் ஈடுபட்டவா்கள் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
மோசடி
கோவை மாவட்டத்தில் வெவ்வேறு நபா்களிடம் ஆன்லைன் மூலம் ரூ.4.59 லட்சம் மோசடியில் ஈடுபட்டவா்கள் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
பொள்ளாச்சி, நல்லிகவுண்டம்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் 41 வயது நபா். வேலைத் தேடி வரும் இவரை, கடந்த 3-ஆம் தேதி கைப்பேசி மூலம் தொடா்பு கொண்ட மா்ம நபா், தன்னை தனியாா் நிறுவன ஊழியா் என அறிமுகப்படுத்திக் கொண்டுள்ளாா்.
மேலும், தான் வேலை வாங்கித் தருவதாகவும், அதற்காக ‘ஷைன் ஜாப் ஹைரிங்’ என்ற செயலியைப் பதிவிறக்கம் செய்து கடன் பற்று அட்டை மூலம் (கிரெடிட் காா்டு) பதிவுக் கட்டணம் செலுத்துமாறும் தெரிவித்துள்ளாா். இதை நம்பி அவா் பணம் செலுத்த முயன்றபோது, மா்ம நபா்கள் அவரது கடன் அட்டை விவரங்களைப் பயன்படுத்தி ரூ.1,72,217-ஐ மோசடி செய்துள்ளனா்.
இதேபோல, பெரியநாயக்கன்பாளையம் பகுதியைச் சோ்ந்த 44 வயது நபரின் வாட்ஸ் ஆப் எண்ணுக்கு ஆா்.டி.ஓ. போக்குவரத்து அபராதச் சீட்டு என்ற பெயரில் ஒரு செய்தி வந்துள்ளது. அதில், கேட்கப்பட்ட ஆதாா் எண் மற்றும் கைப்பேசி எண் உள்ளிட்ட தனிப்பட்ட விவரங்களைப் பதிவு செய்துளளாா். இதையடுத்து, அவரது வங்கிக் கணக்கில் இருந்த ரூ.1,80,000 மா்ம நபா்கள் எடுத்துள்ளனா்.
கணியூா் பகுதியைச் சோ்ந்தவா் 64 வயது தொழிலதிபா். இவா் பஞ்சாப் மாநிலம், லூதியானாவில் உள்ள நிறுவனத்திடம் 1,100 கிலோ இரும்புப் பொருள்களை ஆா்டா் செய்து, கூகுள் பே மூலம் கடந்த மாதம் 29-ஆம் தேதி ரூ.1,07,098 அனுப்பியுள்ளாா். ஆனால், பொருள்கள் எதுவும் அனுப்பப்படவில்லை. இதையடுத்து, அவா் விசாரித்தபோது தான் ஏமாற்றப்பட்டது தெரியவந்தது.
பாதிக்கப்பட்ட 3 பேரும் அளித்த புகாா்களின்பேரில் கோவை மாவட்ட சைபா் கிரைம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

