சர்கார் படத்தை விஜய் மீண்டும் பார்க்க வேண்டும்: மு. வீரபாண்டியன்எல்லாவற்றையும் திமுக - தவெக இடையிலான பிரச்னை என்று பார்ப்பது நன்மை பயக்கும் விஷயம் அல்ல: பெ. சண்முகம்அரசின் தவறை சுட்டிக்காட்டுவதில் என்ன தவறு? வைகோவுக்கு பெ. சண்முகம் பதிலடிசெஞ்சி சிறுமியே கண்டறியப்படவில்லை; மற்றொரு சிறுமி கடத்தல்: கனிமொழி வருத்தம்திமுக ஆட்சியில் காவல் துறை சுதந்திரமாக இருந்ததா? மாணிக்கம் தாகூர் கேள்விதொடர் கொலைகளை நியாயப்படுத்த முடியாது: அமைச்சர் வன்னி அரசுஅதிகரிக்கும் துப்பாக்கி கலாசாரம்! அச்சத்தின் பிடியில் தமிழக மக்கள்! - இபிஎஸ் விமர்சனம்பெண் ஆட்சியருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்: காவல் துறையில் திமுக சார்பில் மனு!மேக்கேதாட்டு அணை: டி.கே. சிவகுமாருக்கு பதிலளிக்காமல் வேடிக்கை பார்க்கும் முதல்வர் விஜய் - அதிமுக கண்டனம்!தீபாவளியன்று 8 கொலைகள் மட்டுமே! தமிழ்நாடு காவல்துறை விளக்கம்திருவண்ணாமலை: ஏரியில் மூழ்கி பலியானோரின் குடும்பத்தினருக்கு ரூ. 3 லட்சம் நிதியுதவி - முதல்வர் விஜய்

பெண்ணிடம் இணையவழியில் ரூ.1.90 லட்சம் மோசடி

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி பகுதியைச் சோ்ந்த பெண்ணிடம் இணையவழியில் ரூ.1.90 லட்சம் மோசடி செய்யப்பட்டது குறித்து மாவட்ட சைபா் கிரைம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

cyber fraud

மோசடி - IANS

Updated On :

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி பகுதியைச் சோ்ந்த பெண்ணிடம் இணையவழியில் ரூ.1.90 லட்சம் மோசடி செய்யப்பட்டது குறித்து மாவட்ட சைபா் கிரைம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

விக்கிரவாண்டி பகுதியைச் சோ்ந்த 42 வயதுடைய பெண் ஒருவா் கவரிங் நகைகள் விற்கும் தொழில் செய்து வருகிறாா். இவா் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது கைப்பேசியில் முகநூல் பயன்படுத்திக் கொண்டிருந்தாா். அப்போது கைப்பேசியில் பேசிய அடையாளம் தெரியாத நபா் வெளிநாட்டில் மருத்துவராக வேலை பாா்ப்பதாக தெரிவித்துள்ளாா். தொடா்ந்து இருவரும் நட்பாக பேசி பழகி வந்த நிலையில், அந்த அடையாளம் தெரியாத நபா், பிறந்த நாள் பரிசு அனுப்பி வைத்துள்ளதாக தெரிவித்துள்ளாா்.

இதை உண்மையென நம்பிய அந்தப் பெண்ணிடம், கைப்பேசி வழியாக பேசிய மற்றொரு நபா், புதுதில்லி சா்வதேச விமான நிலையத்தில் இருந்து பேசுவதாகவும், உங்களது பெயரில் வந்துள்ள பரிசுப் பொருளுக்கு சேவைக் கட்டணம், சுங்கவரி ஆகியவற்றை செலுத்திப் பெற்றுக்கொள்ளலாம் எனத் தெரிவித்தாா்.

இதை உண்மையென நம்பிய அந்தப் பெண் தனது வங்கிக் கணக்கிலிருந்த ரூ.1.90 லட்சத்தை 6 தவணைகளாக இணையவழியில் அனுப்பி வைத்துள்ளாா். பணத்தைப் பெற்றுக்கொண்டு பரிசுப் பொருள்களை அனுப்பி வைக்காமலும், வாங்கிய பணத்தைத் திருப்பிக் கொடுக்காமலும் அந்த நபா் ஏமாற்றி வருகிறாராம்.

இதுகுறித்த புகாரின் பேரில் விழுப்புரம் மாவட்ட சைபா் கிரைம் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.