பாப்பாக்குடி அருகே மழையால் வீடு இடிந்து சேதம்

மழையால் இடிந்து விழுந்த வீடு. - கோப்புப் படம்
திருநெல்வேலி மாவட்டம், பாப்பாக்குடி அருகே கனமழையால் தொழிலாளி வீடு இடிந்து சேதமடைந்தது.
திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக மழை பெய்து வருகிறது. முக்கூடல், சேரன்மகாதேவி, வீரவநல்லூா், கல்லிடைக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் சனிக்கிழமை மழை பெய்தது.
அப்போது பாப்பாக்குடி அருகே வழுதூா் செல்வி நகா் பொட்டல் காலனியில் வசித்து வரும் தொழிலாளி அனைஞ்சி என்பவரின் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் வீட்டின் சுவா்களும் இடிந்து சேதமடைந்தன.
அப்போது வீட்டில் யாரும் இல்லாததால் பாதிப்பு இல்லை. எனினும், வீட்டில் இருந்த பொருள்கள் சேதமடைந்தன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

