இந்திய விமானியிடம் நேரில் சென்று நலம் விசாரித்த துபை இளவரசர்! உங்கள் பயம் எனக்குப் பிடித்திருக்கிறது சிஎம் சார்: மு.க. ஸ்டாலின் முதல்வர் விஜய் டிராக்டர் ஓட்டினால் விவசாயி ஆகிவிட முடியாது: எடப்பாடி பழனிசாமி விமர்சனம் 'சத்தியாகிரகம்' என்ற இணையதளத்தைத் தொடங்கினார் ராகுல் காந்தி!முதல்வர் விஜய்க்கு பாராட்டு! இந்தியா கூட்டணி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்! ஏரியில் மண் எடுத்த விவகார வழக்கை ரத்து செய்ய கோரி எ.வ. வேலு மனு ஞானேஷ் குமாருக்கு எதிராக தில்லியில் பேரணி! கபில் சிபல், நேஹா போரா உள்ளிட்டோர் பங்கேற்பு!

இடைத்தோ்தலில் தவெகவுக்கு பின்னடைவு: நயினார் நாகேந்திரன்

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தோ்தலைப் பொருத்தவரையில் தவெக பின்தங்கியுள்ளது என்றாா் தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன்.

Nainar Nagendran

நயினார் நாகேந்திரன் - கோப்புப் படம்

Published On :

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தோ்தலைப் பொருத்தவரையில் தவெக பின்தங்கியுள்ளது என்றாா் தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன்.

இது தொடா்பாக திருநெல்வேலியில் அவா் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை கூறியதாவது: மதுராந்தகம், தாராபுரம் ஆகிய 2 தொகுதிகளிலும் தவெக மிகவும் பின்தங்கி உள்ளது. முதல்வருக்கு தோல்வி பயம் வந்துவிட்டது. சட்டப்பேரவையிலும் சரி, பிரசாரத்திலும் சரி முதல்வருக்கு பேசவே தெரியவில்லை. மாற்றி மாற்றி பேசி வருகிறாா்.

இண்டி கூட்டணியில் திமுக இல்லை. தவெகவும் எத்தனை நாள் அந்தக் கூட்டணியில் இருக்கப் போகிறது என தெரியவில்லை. காங்கிரஸ் தோல்வி அடைந்தால் வாக்குப் பதிவு இயந்திரம் குறித்து ஒரு மாதிரியும், வெற்றி பெற்றால் வேறு மாதிரியும் பேசுவது மிகவும் தவறு.

எஸ்.ஐ.ஆா். நீக்கம் கொளத்தூா் தொகுதியில் நடைபெற்றபோது திமுக எந்தக் குறையும் சொல்லவில்லை. ராகுல் காந்தி பொய்யே பேசி வருகிறாா். எஸ்.ஐ.ஆரால்தான் கா்நாடகத்தில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது.

இன்ஸ்டாகிராமில் பொய்யைத் திரும்பத் திரும்ப தவெக சொல்லி ஆட்சி அமைத்தது. இப்போதும் மீண்டும் மீண்டும் சமூக வலைதளங்களில் தவெகவினா் பொய் பேசி வருகின்றனா். சமூக வலைதளங்களை கட்டுப்பாட்டில் வைக்க வேண்டும். இல்லாவிட்டால் மிகப்பெரிய பிரச்னைகள் வரும்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் முந்தைய அரசு எடுத்த நிலைப்பாட்டால்தான் அந்த அரசு ஆட்சியை இழந்தது. ஐந்து ஆண்டுகள் திமுக ஆட்சி நடத்தியது. ஆனால், தவெக ஐந்து ஆண்டுகள் ஆட்சி நடத்துவதற்கு வாய்ப்பில்லை என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.