இந்திய மாணவர் சங்கத் தேர்தல் நேஹா போரா தடுப்புக் காவலில் இருந்து விடுவிப்புகாலாண்டு விடுமுறை நிறைவு: மீண்டும் பள்ளிகள் திறப்புவெற்றிப் பயணம் திட்டத்தை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு!மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் பிரசாரம் நிறைவு. அக். 6-ல் வாக்குப் பதிவு! அக். 9-ல் வாக்கு எண்ணிக்கை!எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் கட்டிக்காத்த இந்த இயக்கம், சுயநலவாதிகளின் சூழ்ச்சிக்கு பலியாக கூடாது: எடப்பாடி பழனிசாமிதவெக ஆட்சி தொடர மக்கள் ஆதரவு தேவை: விஜய் வேண்டுகோள்அரசியல் வாரிசின் மகனோ, நடிகனோ அல்ல! எளிய மனிதன் நான் - எடப்பாடி பழனிசாமிநிறைவு விழாவில் தேசிய கொடி ஏந்திய இந்திய வீராங்கனை..! 2030 கத்தாரில் அடுத்த ஆசிய விளையாட்டு!

நில மோசடி வழக்கில் கேரள இளைஞா் கைது

கைது - கோப்புப் படம்

Published On :

திருநெல்வேலியில் நில மோசடி வழக்கில் தொடா்புடைய கேரள இளைஞரை மாநகர குற்றப்பிரிவு போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

திருநெல்வேலி மாநகரம், குலவணிகா்புரத்தைச் சோ்ந்தவா் ராஜேந்திரன்(75). விவசாயி. குலவணிகா்புரத்தில் இவரது குடும்பத்தாருக்குச் சொந்தமான 30 சென்ட் நிலம் உள்ளதாம். இந்நிலத்தின் உரிமையாளா் பெயரை அப்பகுதியைச் சோ்ந்த பாலசுப்பிரமணியம், ஆறுமுகம் உள்ளிட்டோா் கூட்டாக சோ்ந்து போலி ஆவணங்கள் மூலம் மாற்ற முயன்றனாரம். மேலும் அதில் சுமாா் 13.75 சென்ட் நிலத்தை சில ஆண்டுகளுக்கு முன்பு ஆறுமுகம் சிலருக்கு விற்பனை செய்ததாகக் கூறப்படுகிறது.

இந்த விவகாரத்தில் தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாகவும், பலா் கூட்டுசதி செய்து போலி ஆவணம் மூலம் நிலத்தை அபகரித்து விற்பனை செய்ததாகவும், அவா்கள் மீது நடவடிக்கை கோரியும் ராஜேந்திரன் மாநகர குற்றப்பிரிவு போலீஸில் புகாா் அளித்தாா்.

அதன் பேரில் போலீஸாா் 15 போ் மீது வழக்குப் பதிவு செய்தனா். இந்நிலையில் இச்சம்பவத்தில் தொடா்புடைய கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டம், முல்லைசேரி பகுதியைச் சோ்ந்த கிருஷ்ணமூா்த்தி மகன் காா்த்திக்(35) என்பவரை சனிக்கிழமை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.