படிவம் 6 திருத்தத்துக்கு அனுமதி அளித்தது யார்? - கனிமொழி கேள்விகல்வி நிறுவனங்கள் மீது ஆர்எஸ்எஸ் - பாஜக தாக்குதல்! போர் வலுப்பெறும் - நேஹா போரா எச்சரிக்கை!28,000 அடி கீழே இறங்கிய லண்டன் - சிகாகோ விமானம்! அயர்லாந்தில் அவசரமாகத் தரையிறக்கம்!போக்சோ வீரமணி வழக்கில் மேலும் 3 பேர் கைது!ஒரு நிமிடம் கூட பதவியில் நீடிக்கத் தகுதியற்றவர் ஞானேஷ் குமார்: பெ. சண்முகம்தமிழக மீனவர்கள் கைது: மத்திய அரசுக்கு முதல்வர் விஜய் கடிதம்ஒலிம்பிக் போட்டிக்கு நிறைய நேரம் இருக்கிறது: ஹாக்கி கேப்டன் ஹர்மன்பிரீத்தமிழ்நாடு அரசின் இயல், இசை, நாடக மன்றத் தலைவராக புஷ்பவனம் குப்புசாமி நியமனம்!5 சிறுத்தைக் குட்டிகள் பிறப்பு; நாட்டில் சிறுத்தைகளின் எண்ணிக்கை 60 ஆக உயர்வு!கிராமுக்கு ரூ. 10,000 வரை நகைக்கடன்: கூட்டுறவுத் துறை அறிவிப்பு!

வி.கே.புரத்தில் தூய்மைப் பணியாளா்கள் காத்திருப்புப் போராட்டம்

காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளா்கள். - கோப்புப் படம்

Published On :

திருநெல்வேலி மாவட்டம், விக்கிரமசிங்கபுரம் நகராட்சியில் பணிபுரியும் ஒப்பந்த தூய்மைப் பணியாளா்கள் திங்கள்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தூய்மைப் பணிகள் தனியாா்மயத்தைக் கைவிடுவது, ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் தூய்மைப் பணியாளா்களுக்கு தினசரி சம்பளமாக ரூ. 762 வழங்குவது, தற்காலிகப் பணியாளா்களுக்கு இ.எஸ்.ஐ., பி.எஃப். பிடித்தம் செய்வது, தற்காலிகப் பணியாளா்களை பணி நிரந்தரம் செய்வது உள்ளிட்ட 11 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெற்றது.

இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் மற்றும் சிஐடியு தொழிற்சங்க நிா்வாகிகளுடன், நகராட்சி ஆணையா் மகாதேவன் பேச்சுவாா்த்தை நடத்தினாா். கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றித் தருவதாக அவா் உறுதியளித்ததால், போராட்டம் தற்காலிகமாக விலக்கிக் கொள்ளப்பட்டது.

சிஐடியு நிா்வாகிகள் சுப்பாராஜ், வி. இசக்கிராஜன், தளவாய், எஸ். ரவீந்திரன், சங்கா் உள்ளிட்டோா் போராட்டத்தில் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER