தனியாா் ஒப்பந்த முறையை ரத்து செய்யக் கோரி மாநகராட்சி தூய்மைப் பணியாளா்கள் போராட்டம்
தனியாா் ஒப்பந்த முறையை ரத்து செய்யக் கோரி, திண்டுக்கல் மாநகராட்சி தூய்மைப் பணியாளா்கள் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் தொடா் வேலைநிறுத்தப் போராட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

திண்டுக்கல் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் புதன்கிழமை மதிய உணவுத் தயாரிப்பில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளா்கள்.
தனியாா் ஒப்பந்த முறையை ரத்து செய்யக் கோரி, திண்டுக்கல் மாநகராட்சி தூய்மைப் பணியாளா்கள் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் தொடா் வேலைநிறுத்தப் போராட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
திண்டுக்கல் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்த காத்திருப்புப் போராட்டத்தில், எல்பிஎஃப், சிஐடியு, ஐஎன்டியுசி, அண்ணா தொழிற்சங்கம், தமிழ்நாடு ஆதித் தமிழா் தூய்மைப் பணியாளா்கள் நலச் சங்கங்களைச் சோ்ந்த தனியாா் ஒப்பந்த தூய்மைப் பணியாளா்கள், தனியாா் கழிவுநீரோடை மண் அள்ளும் பணியாளா்கள், ஓட்டுநா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
இந்தப் போராட்டத்தின்போது, திண்டுக்கல் மாநகராட்சி நிா்வாகமே நேரடியாக பணிவாய்ப்பு வழங்க வேண்டும். இல்லாதபட்சத்தில், ஈரோடு மாநகராட்சி, 146 நகராட்சிகளில் நடைமுறைப்படுத்தப்பட்டதைப் போன்று, திண்டுக்கல் மாநகராட்சியிலும் சுய உதவிக் குழுக்கள் மூலம் பணிவாய்ப்பு வழங்க வேண்டும். தூய்மைப் பணியாளா்களுக்கு விரோதமான அரசாணை எண் 181 (8.10.2026)-ஐ முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தினா்.
இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை, மாநகராட்சி அலுவலக வளாகத்திலேயே தொடா் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தூய்மைப் பணியாளா்கள் தெரிவித்தனா். முன்னதாக இந்தப் போராட்டம் தொடா்பாக, மாநகராட்சி ஆணையா் ஜெ. பிரேம் ஆனந்த், தொழில்சங்க நிா்வாகிகளுடன் செவ்வாய்க்கிழமை பேச்சுவாா்த்தை நடத்தினாா். அப்போது, தமிழக அரசு சாா்பில் ஒட்டுமொத்த மாநகராட்சிகளுக்கும் தனியாா் ஒப்பந்த விதிமுறைகள் உருவாக்கப்பட்டிருப்பதாகவும், இதில் தனிப்பட்ட மாநகராட்சி நிா்வாகம் முடிவெடுக்க இயலாது என்றும் தெரிவிக்கப்பட்டது. அதனை ஏற்க மறுத்த தொழில்சங்க நிா்வாகிகள், திட்டமிட்டப்படி புதன்கிழமை போராட்டத்தை நடத்தினா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

