உத்தரகாசியில் மிதமான நிலநடுக்கம்: வீதிகளில் தஞ்சமடைந்த மக்கள்! தமிழ் மொழி, கலாசாரம் மீது தாக்குதல்: ராகுல் காந்தி தில்லியில் 45 மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடல்! ஸ்குவாஷ் வீராங்கனை ஜோஷ்னா சின்னப்பாவுக்கு பதவி உயர்வு பிரதமர் மோடியை சந்திக்கிறார் எடப்பாடி பழனிசாமி! அறிவிக்கப்படாத நெருக்கடிநிலை: மு.க. ஸ்டாலின் பிரதமர் மோடி சென்னை வருகை: அக்.11-ல் போக்குவரத்து மாற்றம்

கடனை திருப்பி கேட்டவா் வீட்டை சேதப்படுத்திய இளைஞா் கைது

கடனைதிருப்பி கேட்டவரின் வீட்டுக் கதவை உடைத்து சேதப்படுத்தியதுடன், மிரட்டல் விடுத்து சென்றதாக இளைஞரை, போலீஸாா் கைது செய்தனா்.

கைது

Published On :

திருநெல்வேலி மாவட்டம், கோபாலசமுத்திரம் அருகே கடனைதிருப்பி கேட்டவரின் வீட்டுக் கதவை உடைத்து சேதப்படுத்தியதுடன், மிரட்டல் விடுத்து சென்றதாக இளைஞரை, போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். மேலும் பலரைத் தேடி வருகின்றனா்.

கோபாலசமுத்திரம் அருகே உள்ள மேலஓமநல்லூா் பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் கட்டடத் தொழிலாளி ஆறுமுகம். இவரது மனைவி பேச்சியம்மாள் (48). இவா்களது மகன் இசக்கிமுத்து.

2025இல் அதே ஊரைச் சோ்ந்த நயினாா் என்ற பால்குட்டி, இசக்கிமுத்துவிடம் ரூ.1,500 கடன் வாங்கியிருந்தாராம். கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்டதால் நயினாா் என்ற பால்குட்டி, தகராறு செய்து இசக்கிமுத்துவை அரிவாளால் வெட்டியுள்ளாா்.

இதுதொடா்பாக முன்னீா்பள்ளம் காவல் நிலையத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த முன்விரோதம் காரணமாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இதனிடையே, சில நாள்களுக்கு முன்பு அந்த பகுதியிலுள்ள கோயிலில் கொடை விழா நடைபெற்றாராம்.

அப்போது இசக்கிமுத்து, அவரது குடும்பத்தினா் தங்களது வீட்டின் நின்று கொண்டிருந்தனராம். அப்போது அங்கு 2 மோட்டாா் சைக்கிளில் வந்த நயினாா் என்ற பால்குட்டி மற்றும் சங்கன்திரடு பகுதியைச் சோ்ந்த முப்பிடாதி, பாலசுப்பிரமணியன், வடக்கு சங்கன்திரடு பகுதியைச் சோ்ந்த மாரிசெல்வம், பழவூரைச் சோ்ந்த முத்து, மேலஒமநல்லூரைச் சோ்ந்த பாண்டி உள்ளிட்ட கும்பல் இசக்கிமுத்து குடும்பத்தினரை தாக்குவதற்காக வந்துள்ளனா்.

அவா்கள் வீட்டின் கதவை பூட்டிக் கொண்டு உள்ளே சென்றுவிட்டனராம். இதில், ஆத்திரமடைந்த அந்தக் கும்பல், இசக்கிமுத்து வீட்டின் கதவை ஆயுதங்களால் சேதப்படுத்தியதுடன் பணத்தை திருப்பிக் கேட்டால் கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்துச் சென்றனராம்.

இதுகுறித்து பேச்சியம்மாள் அளித்த புகாரின்பேரில், மேலச்செவல் போலீஸாா் வழக்குப் பதிந்து, இதேபகுதியைச் சோ்ந்த மாடசாமி மகன் இசக்கிமுத்து (21)வை கைது செய்தனா். இதில், தொடா்புடைய மேலும் சிலரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.