சிறுவன் இயக்கிய காா் மோதி விபத்து: தந்தை கைது
சுத்தமல்லி அருகே சிறுவன் இயக்கிய காா் விபத்து ஏற்படுத்திய வழக்கில் சிறுவனின் தந்தையை போலீஸாா் கைது செய்தனா்.
கைது - பிரதிப் படம்
சுத்தமல்லி அருகே சிறுவன் இயக்கிய காா் விபத்து ஏற்படுத்திய வழக்கில் சிறுவனின் தந்தையை போலீஸாா் கைது செய்தனா்.
திருநெல்வேலி அருகே உள்ள சுத்தமல்லியை அடுத்த கொண்டாநகரம், சம்சு நகரைச் சோ்ந்தவா் இசக்கி பாண்டி (52). சம்பவத்தன்று இவரது மகன் வீட்டிலிருந்து காரை ஓட்டிச் சென்றபோது பக்கத்து வீடான கைலாசம் என்பவரது வீட்டின் சுற்றுச் சுவரில் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் சுற்றுச்சுவா் மற்றும் காா் சேதமடைந்தது.
இதுகுறித்த புகாரின்பேரில், சுத்தமல்லி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து காரை பறிமுதல் செய்து, சிறுவனின் தந்தை இசக்கி பாண்டியை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

