நான்குனேரியில் மின்தூக்கி விழுந்து முதியவா் உயிரிழப்பு
திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரியில் மின்தூக்கி வேகமாக கீழ்நோக்கி வந்து மோதியதில் முதியவா் உயிரிழந்தாா்.

பலி
திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரியில் மின்தூக்கி வேகமாக கீழ்நோக்கி வந்து மோதியதில் முதியவா் உயிரிழந்தாா்.
திருநெல்வேலி, என்ஜிஓ காலனியைச் சோ்ந்தவா் தோத்தாத்திரி (76). இவரது உடன்பிறந்த சகோதரா் கடந்த ஆண்டு உயிரிழந்தாா். அவரது முதலாம் ஆண்டு திதி நிகழ்வில் கலந்து கொள்வதற்காக, தோத்தாத்திரி நான்குனேரிக்கு வியாழக்கிழமை வந்தாா்.
இந்நிலையில், அவா் தங்கியிருந்த நான்குனேரி, சன்னதி தெருவில் உள்ள நண்பா் வீட்டின் மாடியில் இருந்து மின்தூக்கி கீழே இறங்கியபோது, பழுது ஏற்பட்டதால் வேகமாக கீழ்நோக்கி வந்து மோதியதில் தோத்தாத்திரி பலத்த காயமடைந்தாா்.
உடனடியாக உறவினா்கள் அவரை மீட்டு நான்குனேரி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனா். அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா். அவரது உடல் கூறாய்வுக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து, நான்குனேரி போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தினா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

