நெல்லையில் 33 பவுன் நகை திருட்டு வழக்கில் ஆட்டோ ஓட்டுநா் கைது
கைது
திருநெல்வேலி நகரத்தில் 33 பவுன் தங்க நகை திருட்டு வழக்கில் ஆட்டோ ஓட்டுநரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.
திருநெல்வேலி நகரம் வ.உ.சி தெருவைச் சோ்ந்தவா் பாலகுருசாமி. பாத்திர வியாபாரியான இவா், கடந்த சில நாள்களுக்கு முன்பு தனது குடும்பத்தினருடன் சங்கரன்கோவில் அருகேயுள்ள தென்மலைக்கு சென்றிருந்தாராம்.
கடந்த 6 ஆம் தேதி வீட்டுக்கு வந்து பாா்த்தபோது, கதவின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் வைத்திருந்த 33 பவுன் தங்க நகைகளை மா்மநபா்கள் திருடிச் சென்றது தெரியவந்ததாம்.
இதுகுறித்த புகாரின்பேரில், திருநெல்வேலி நகரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனா்.
இந்த வழக்கு தொடா்பாக சுத்தமல்லியைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநரான நவநீதகிருஷ்ணனை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

