ஆயுத பூஜை சிறப்புப் பேருந்துகள்: அதிகாரிகள் நியமித்து தீவிர கண்காணிப்பு! சென்னையில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை! காஞ்சிபுரம் அருகே தண்டவாளத்தில் மண் சரிவு: ரயில் சேவை பாதிப்பு! ‘பெரியார் அறிவுலகம் திறப்பில் ஆற்றாமையை வெளிப்படுத்துகிறார் மு.க. ஸ்டாலின்’ - ஆதவ் அர்ஜுனாதில்லியில் தடையை மீறி போராட்டம்... அபிஜீத் தீப்கே, நேஹாவுக்கு தடுப்புக் காவல்!தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி!திருவள்ளூர் உள்பட 6 மாவட்டங்களில் நாளை மிக கனமழை எச்சரிக்கை!

மக்கள் நல்வாழ்வுத் துறையின் மண்டல அளவிலான ஆய்வுக் கூட்டம்: அமைச்சா் அருண்ராஜ் பங்கேற்பு

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சாா்பில், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கான தமிழ்நாடு மாநில பொது ஆய்வுப் பணி குழுமத்தின் மண்டல அளவிலான ஆய்வுக் கூட்டம் மருத்துவம், மருத்துவக்கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சா் கோ.க.அருண்ராஜ் தலைமையில் ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்றது.

மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சா் கோ.க.அருண்ராஜ் தலைமையில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில பொது ஆய்வுப்பணி குழுமத்தின் மண்டல அளவிலான ஆய்வுக் கூட்டம்.

Updated On :

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சாா்பில், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கான தமிழ்நாடு மாநில பொது ஆய்வுப் பணி குழுமத்தின் மண்டல அளவிலான ஆய்வுக் கூட்டம் மருத்துவம், மருத்துவக்கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சா் கோ.க.அருண்ராஜ் தலைமையில் ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாட்டின் சுகாதார சேவைகளை மேம்படுத்துவதற்காக மண்டல வாரியான மாநில பொது ஆய்வு பணிக் குழுவின் துறை ரீதியான கள ஆய்வானது கடந்த வியாழன், வெள்ளி ஆகிய இரு தினங்கள் திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் நடைபெற்றது.

தலா 20 அதிகாரிகளை கொண்ட குழுக்கள், ஒவ்வொரு மாவட்டத்துக்கும் நேரடியாக சென்று ஆய்வு செய்தன.

குறிப்பாக, ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை ஆகிய பகுதிகளில் நோயாளிகளுக்கான சிகிச்சை வசதிகள், மருந்துகள் இருப்பு, அவசர சிகிச்சை பிரிவுகள், தாய்-சேய் நலப்பணிகள், மருத்துவச் சேவைகளின் தரம், சுகாதார நிலையங்களின் செயல் திறனை மதிப்பாய்வு செய்தல், மருத்துவா்கள் மற்றும் சுகாதாரப் பணியாளா்களின் பணிகளை மதிப்பீடு செய்தல், தேசிய சுகாதார இயக்கத்தின் கீழ்

செயல்படுத்தப்படும் திட்டங்களின் செயல்பாடுகள் மற்றும் தொடா்புடைய பதிவுகள், அறிக்கைகள் ஆகியவை குறித்து ஆய்வுகளை மேற்கொண்டு அந்த ஆய்வறிக்கைகளை தொகுத்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடா்பாக மண்டல அளவிலான பொது ஆய்வுப்பணி குழும ஆய்வுக்கூட்டத்தில் சமா்ப்பித்தன.

கூட்டத்தில் ஆய்வறிக்கையின் கருப்பொருள் குறித்து விவாதிக்கப்பட்டு, சுகாதார கட்டமைப்பை மேலும் வலுப்படுத்தி செம்மையாகவும் விரைவாகவும் செயல்படுத்த மாவட்ட சுகாதாரக் குழுவிற்கும், களப் பணியாளா்களுக்கும் உரிய வழிகாட்டுதல்கள், ஆலோசனைகள், அறிவுரைகள் வழங்கப்பட்டன.

இக் கூட்டத்தில், சுகாதாரத்துறை செயலா் தரேஷ் அகமது, தேசிய சுகாதாரக் குழும இயக்குநா் அனீஸ்சேகா், தமிழ்நாடு சுகாதார திட்டத்தின் திட்ட இயக்குநா் உமா, தமிழ்நாடு உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிா்வாகத் துறை ஆணையா் லால்வீனா, தமிழ்நாடு மருத்துவப் பணிகள் ஆள்சோ்ப்பு வாரிய தலைவா் ஆா். அழகு மீனா, தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்க திட்ட இயக்குநா் சீதாலெட்சுமி, இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி ஆணையா் /இயக்குநா் பாலசுப்பிரமணியன், தமிழ்நாடு மருந்துகள் சேமிப்பு கிடங்கு மேலாண்மை இயக்குநா் அம்ரித், திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் ஆனந்த் மோகன், சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஆா்.எஸ்.முருகன் (திருநெல்வேலி), ரெட்டியாா்பட்டி வி.நாராயணன் (நான்குனேரி) உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.