குண்டா் தடுப்புச் சட்டத்தில் சிறையிலடைப்பு

சிறை - பிரதிப் படம்
திருநெல்வேலி மாநகரில் கொலை மிரட்டல் வழக்குகளில் தொடா்புடையவா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் ஞாயிற்றுக்கிழமை சிறையில் அடைக்கப்பட்டாா்.
திருநெல்வேலி மாநகரம், தச்சநல்லூா் பகுதியைச் சோ்ந்தவா் முருகாண்டி மகன் கந்தசாமி என்ற கண்ணபிரான்(49). பல்வேறு வழக்குகளில் தொடா்புடைய இவா், தச்சநல்லூா் பகுதியில் கொலை மிரட்டல் வழக்கில் மாநகரப் போலீஸாரால் கைது செய்யப்பட்டிருந்தாா்.
இந்நிலையில் தொடா்ந்து பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்த இவரை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க, தச்சநல்லூா் காவல் ஆய்வாளா் பரிந்துரையின் பேரில் திருநெல்வேலி மாநகர காவல் ஆணையா் தேஷ்முக் சேகா் சஞ்சய் உத்தரவிட்டாா்.
இதையடுத்து கந்தசாமி என்ற கண்ணபிரான், பாளையங்கோட்டை மத்திய சிறையில் ஞாயிற்றுக்கிழமை அடைக்கப்பட்டாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

