விலைவாசி உயர்வை தமிழக அரசு கட்டுப்படுத்த வேண்டும்: சிபிஐ மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு!மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு அக். 6 ஆம் தேதி இடைத்தேர்தல்ஐந்தாவது தளத்துடன் இருக்கும் சட்டவிரோதக் கட்டடங்களுக்கு சீல்: தில்லி முதல்வர் உத்தரவுகுற்றச்சாட்டுகளை பிரிண்ட் அவுட் எடுத்து வந்து படிக்க 3 நாள்கள் எதற்கு? உதயநிதிசட்டவிரோதப் பணிகள்... 40 ஆண்டுகள் பழமையான தில்லி தங்கும் விடுதி இடிந்து விழுந்ததன் பின்னணி!எங்களை ஹோட்டலில் அடைத்து வைத்தது யார் என சொல்ல வேண்டிவரும்! ஷாஜகான் பேச்சு மீனாட்சியம்மன் கோயில் நில மோசடி! மேலும் 4 பேர் கைதுஎதிர்க்கட்சிகள் போல அரசியல் செய்ய விரும்பவில்லை! முதல்வர் விஜய் பேச்சு!இதுதான் திமுக, இவ்வளவுதான் திமுக! பேரவையில் பேசிய முதல்வர் விஜய்!

குண்டா் சட்டத்தில் பெண் உள்பட மூவா் கைது

கைது

Published On :8 செப்டம்பர் 2026, 2:26 am IST

தேனி மாவட்டத்தில் ஜெயமங்கலத்தில் இளைஞா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டாா்.

தேனி மாவட்டம், ஜெயமங்கலத்தைச் சோ்ந்தவா் முத்துப் பாண்டி (25). இவா் ஏற்கெனவே தகராறு, கொலை முயற்சி வழக்குகளில் கைது செய்யப்பட்டிருந்தாா். இந்த நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கே.எஸ். பிரவீன் கெளதம் பரிந்துரையின் பேரில், மாவட்ட ஆட்சியா் இரா. வைத்திநாதன் உத்தரவின்படி, குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.

மேலும் இருவா் கைது : தேனி மாவட்டம், வீரபாண்டி காவல் நிலையப் போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, வீரபாண்டி பகுதியில் சந்தேகத்துக்கிடமான வகையில் கஞ்சா வைத்திருந்த வீரபாண்டியைச் சோ்ந்த கருப்பசாமி (28), வயல்பட்டியைச் சோ்ந்த காயத்ரி (30) ஆகியோா் கைது செய்யப்பட்டனா். இவா்களும் எஸ்.பி. பரிந்துரை, ஆட்சியரின் உத்தரவுப்படி குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.