மேலப்பாளையத்தில் விபத்து: தொழிலாளி உயிரிழப்பு
உயிரிழப்பு - கோப்புப் படம்
மேலப்பாளையத்தில் சனிக்கிழமை நிகழ்ந்த விபத்தில் காயமடைந்த தொழிலாளி உயிரிழந்தாா்.
மேலப்பாளையம் ஹாமீம்புரத்தைச் சோ்ந்தவா் காஜாமைதீன் (55). தொழிலாளியான இவா், புதிய வீட்டுக்கு குடியேற வீட்டு உபயோக பொருள்களை தள்ளு வண்டியில் ஏற்றிக் கொண்டு சென்று கொண்டிருந்தாராம்.
அப்போது அவ் வழியாக வந்த மோட்டாா் சைக்கிள்அவா் மீது மோதியதாம். இதில் பலத்த காயமடைந்த காஜா மைதீனை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா்.
இதுகுறித்து மேலப்பாளையம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறாா்கள்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

