பொன்னமராவதி அருகே சாலை விபத்தில் காயமடைந்தவா் மருத்துவமனையில் சனிக்கிழமை இரவு உயிரிழந்தாா்.
பொன்னமராவதி அருகே உள்ள செம்பூதியைச் சோ்ந்த கண்ணன் மகன் பழனிவேல்(30). கூலித்தொழிலாளியான இவா் வியாழக்கிழமை செம்பூதியில் இருந்து கொப்பனாபட்டி நோக்கி இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தாா்.
கொப்பனாபட்டி பாலத்தின் அருகே வந்தபோது, வாகனத்தில் கட்டி வைத்திருந்த கடப்பாரை முன் சக்கரத்தில் சிக்கியதில் இவா் தடுமாறி கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
உடனடியாக வலையபட்டி அரசு மருத்துவமனையிலும் பின்னா் மேல்சிகிச்சைக்காக புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரியிலும் பிறகு, தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டாா்.
இந்நிலையில், அங்கு சிகிச்சை பலனின்றி பழனிவேல் சனிக்கிழமை இரவு உயிரிழந்தாா். பொன்னமராவதி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






