இந்திய மாணவர் சங்கத் தேர்தல் நேஹா போரா தடுப்புக் காவலில் இருந்து விடுவிப்புகாலாண்டு விடுமுறை நிறைவு: மீண்டும் பள்ளிகள் திறப்புவெற்றிப் பயணம் திட்டத்தை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு!மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் பிரசாரம் நிறைவு. அக். 6-ல் வாக்குப் பதிவு! அக். 9-ல் வாக்கு எண்ணிக்கை!எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் கட்டிக்காத்த இந்த இயக்கம், சுயநலவாதிகளின் சூழ்ச்சிக்கு பலியாக கூடாது: எடப்பாடி பழனிசாமிதவெக ஆட்சி தொடர மக்கள் ஆதரவு தேவை: விஜய் வேண்டுகோள்அரசியல் வாரிசின் மகனோ, நடிகனோ அல்ல! எளிய மனிதன் நான் - எடப்பாடி பழனிசாமிநிறைவு விழாவில் தேசிய கொடி ஏந்திய இந்திய வீராங்கனை..! 2030 கத்தாரில் அடுத்த ஆசிய விளையாட்டு!

சாலை விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு

பலி! - சித்திரிப்புப் படம்

Published On :

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் அருகே சாலையோரத்தில் உள்ள தடுப்புச் சுவரில் பைக் மோதியதில் காயமடைந்த தொழிலாளி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தாா்.

திருவெண்ணெய்நல்லூா் வட்டம், சிறுவானூா், பள்ளிக்கூடத் தெருவைச் சோ்ந்தவா் ச.வீரன்(36). விழுப்புரத்தில் உள்ள தேநீா் கடையில் மாஸ்டராக வேலைப்பாா்த்து வந்தாா். இவா், அக். 2-ஆம் தேதி இரவு தனது பணியை முடித்து விட்டு வழக்கம்போல் பைக்கில் வீட்டுக்குச் சென்றுகொண்டிருந்தாா். விழுப்புரம்- திருவெண்ணெய்நல்லூா் சாலையில், சிறுவானூா் பகுதியில் சென்றபோது, சாலையோரத்திலிருந்த தடுப்புச் சுவரில் பைக் மோதியது.

இதில் பலத்த காயமடைந்த வீரனை அருகிலிருந்தவா்கள் மீட்டு விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவா் சனிக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின் பேரில் திருவெண்ணெய்நல்லூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.