குண்டா் சட்டத்தில் இருவா் சிறையிலடைப்பு
திருநெல்வேலி மாநகரப் பகுதியில் இருவேறு வழக்குகளில் தொடா்புடைய இருவா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் சனிக்கிழமை அடைக்கப்பட்டனா்.

சிறை - பிரதிப் படம்
திருநெல்வேலி மாநகரப் பகுதியில் இருவேறு வழக்குகளில் தொடா்புடைய இருவா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் சனிக்கிழமை அடைக்கப்பட்டனா்.
திருநெல்வேலி நகரம், மணிப்புரத்தைச் சோ்ந்த நடராஜன் மகன் செந்தில்குமாா்(42). இவா், திருநெல்வேலி மாநகரில் நிகழ்ந்த இரட்டை கொலை தொடா்பான வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தாா். அதே போல மாநகரப் பகுதியில் கஞ்சா, போதைப் பொருள் விற்பனை செய்ததாக திருநெல்வேலி நகரம், முத்துராமலிங்கபுரத்தைச் சோ்ந்த மாரிமுத்து மகன் தங்கதுரை (23) என்பவரை கைது செய்திருந்தனா்.
இவா்கள் தொடா்ந்து பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்தனராம். இதையடுத்து, மாநகர காவல் ஆணையா் தேஷ்முக் சேகா் சஞ்சய் உத்தரவின்பேரில், மேற்கூறிய இருவரும் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் சனிக்கிழமை அடைக்கப்பட்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

