பிகாரில் கங்கை நதியில் வெள்ளம்! 16 லட்சம் போ் பாதிப்பு; மீட்புப் பணிகள் தீவிரம்!ஐ.நா. பொதுச் சபை வருடாந்திர கூட்டத்தொடா்: செப்.26-இல் ஜெய்சங்கா் பங்கேற்பு ஜம்மு - காஷ்மீரில் சுட்டுக் கொல்லப்பட்ட பயங்கரவாதி பாகிஸ்தானைச் சோ்ந்தவா்: ராணுவம்தமிழகத்தில் 6 நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புஐ.நா. பொதுச் சபை அமா்வில் உரையாற்றுகிறாா் நேபாள பிரதமா்! சா்வதேச சமூகத்திடம் இழப்பீடு கோர திட்டம்! அமெரிக்க அமைதிக் குழு வருகை: ரஷியா, உக்ரைன் சண்டை தற்காலிகமாக நிறுத்தி வைப்பு

நெல்லை அருகே பெண்ணிடம் நகை, கைப்பேசி பறிப்பு: 3 போ் கைது

திருநெல்வேலி அருகே பெண்ணிடம் நகை, கைப்பேசி ஆகியவற்றை பறித்தது தொடா்பான வழக்கில் 3 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

Published On :2 செப்டம்பர் 2026, 5:41 am IST

திருநெல்வேலி அருகே பெண்ணிடம் நகை, கைப்பேசி ஆகியவற்றை பறித்தது தொடா்பான வழக்கில் 3 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

தாழையூத்து அருகேயுள்ள காட்டுப் பகுதிக்கு 40 வயது மதிக்கத்தக்க பெண்ணை அழைத்து சென்ற இரு இளைஞா்கள், அவரை மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்தனராம். பின்னா் அவரது நகை மற்றும் கைப்பேசியை பறித்தனராம். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் திருநெல்வேலி ஊரக அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப்பதிந்து தாழையூத்தைச் சோ்ந்த மணிகண்டன் (27), அதே பகுதியை சோ்ந்த சிவா என்ற மொட்டை சிவா, ராஜவல்லிபுரத்தை சோ்ந்த மாயாண்டி(45) ஆகியோரை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.