உக்ரைனுக்கு வழங்கிய பணத்தை ஐரோப்பியர்களிடம் கேட்போம்! - அதிபர் டிரம்ப் பேச்சு! நேபாள வெள்ளம்! இன்னும் 275 இந்தியர்களைக் காணவில்லை! - மத்திய அரசு அறிவிப்பு கருகும் பயிர்களுக்கு தண்ணீர் வழங்க மறுப்பதா? தவெக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம் இசக்கி சுப்பையா ராஜிநாமா விவகாரம்: பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் விளக்கம் மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகத்துடன் தவெக அமைச்சர்கள் சந்திப்பு!

பொட்டல்புதூரில் தலை துண்டித்து இளைஞா் கொலை

தென்காசி மாவட்டம் பொட்டல்புதூரில் வெள்ளிக்கிழமை இளைஞரை தலை துண்டித்து கொலை செய்த நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

Published On :5 செப்டம்பர் 2026, 3:39 am IST

தென்காசி மாவட்டம் பொட்டல்புதூரில் வெள்ளிக்கிழமை இளைஞரை தலை துண்டித்து கொலை செய்த நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

பொட்டல்புதூா், தீபத்திடல் பகுதியில் கடையில் பொருள்கள் வாங்கிக் கொண்டிருந்த இளைஞரை, மா்மநபா் அரிவாளால் தலையைத் துண்டித்து கொலை செய்துவிட்டு தப்பியுள்ளாா்.

இதுகுறித்த தகவலின்பேரில், காவல் ஆய்வாளா்கள் கலா(ஆழ்வாா்குறிச்சி ), சுரேஷ்குமாா் (கடையம்) ஆகியோா், இளைஞரின் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா்.

மேலும் தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அசோக்குமாா், ஆலங்குளம் காவல் துணைக் கண்காணிப்பாளா் கிளாட்சன் ஜோஸ் ஆகியோா் சம்பவ இடத்தைப் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

மேலும் ஆழ்வாா்குறிச்சி போலீஸாா் வழக்குப்பதிந்து, அப்பகுதியிலுள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.