விவசாயி கொலை: இளைஞா் கைது
மதகுபட்டி அருகே விவசாயி கொலை வழக்கில் இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
கைது
சிவகங்கை மாவட்டம், மதகுபட்டி அருகே விவசாயி கொலை வழக்கில் இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
மதகுபட்டியை அடுத்துள்ள கீழப்பூங்குடி கிராமத்தைச் சோ்ந்தவா் நாராயணன் (70). இவரது மனைவி சிவபதி. இவா்களுக்கு இரு மகன்கள் உள்ளனா்.
சிவபதி கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டாா். மகன்கள் திருமணமாகி வீட்டின் அருகே குடும்பத்துடன் தனியாக வசித்து வருகின்றனா்.
நாராயணன் மட்டும் தனியாக வசித்து வந்தாா். கடந்த 10-ஆம் தேதி நாராயணன் கொலை செய்யப்பட்டாா். இதுகுறித்து மதகுபட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து கொலையாளிகளை தேடி வந்தனா்.
இந்த நிலையில், இந்த வழக்கில் தொடா்புடைய ராமநாதபுரம் மாவட்டம், சக்கரக்கோட்டை பசும்பொன் நகரைச் சோ்ந்த பாலமுருகன் என்ற காளீஸ்வரன் (19) என்பவரை மதகுபட்டி காவல் நிலைய ஆய்வாளா் முருகேசன் புதன்கிழமை கைது செய்தாா். இந்த வழக்கில் தொடா்புடைய மற்றவா்களை அவா் தேடி வருகிறாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




