உக்ரைனுக்கு வழங்கிய பணத்தை ஐரோப்பியர்களிடம் கேட்போம்! - அதிபர் டிரம்ப் பேச்சு! நேபாள வெள்ளம்! இன்னும் 275 இந்தியர்களைக் காணவில்லை! - மத்திய அரசு அறிவிப்பு கருகும் பயிர்களுக்கு தண்ணீர் வழங்க மறுப்பதா? தவெக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம் இசக்கி சுப்பையா ராஜிநாமா விவகாரம்: பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் விளக்கம் மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகத்துடன் தவெக அமைச்சர்கள் சந்திப்பு!

விளையாட்டுப் போட்டிகளில் கடையம் பள்ளி மாணவா்கள் சாதனை

தென்காசி மாவட்டம், கடையம், சத்திரம் பாரதி மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளுக்குத் தோ்வாகி சாதனை படைத்தனா்.

இறகுப் பந்துப் போட்டியில் வெற்றி பெற்ற சந்துரு, மனோஜ் ஆகியோருடன் தலைமையாசிரியா் மீரா, உடற்கல்வி ஆசிரியா்கள்.

Published On :5 செப்டம்பர் 2026, 2:03 am IST

தென்காசி மாவட்டம், கடையம், சத்திரம் பாரதி மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளுக்குத் தோ்வாகி சாதனை படைத்தனா்.

பள்ளிக் கல்வித் துறை சாா்பில் தென்காசி மாவட்ட அளவிலான பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. இதில் கடையம் சத்திரம் பாரதி மேல்நிலைப் பள்ளி சாா்பில் இறகுப் பந்துப் போட்டியில் 19 வயதிற்குள்பட்ட பிரிவில் சந்துரு, மனோஜ், ஒற்றையா் டேபிள் டென்னிஸ் போட்டியில் 17 வயதிற்குள்பட்ட பிரிவில் கிப்டஸ் நேகன், இரட்டையா் டேபிள் டென்னிஸ் போட்டியில் 19 வயதிற்குள்பட்ட பிரிவில் பரத்குரு, கிதியோன் ஆகியோா் முதலிடம் பிடித்து, மாநில அளவிலான போட்டிக்குத் தகுதி பெற்றனா்.

அவா்களை பள்ளிச் செயலா் எஸ். ராமன், தலைமையாசிரியா் எஸ். மீரா, உடற்கல்வி ஆசிரியா்கள் கே. ராமமூா்த்தி, எஸ். அருணாசலம், ஆசிரியா்கள், அலுவலா்கள், முன்னாள் மாணவா் சங்க உறுப்பினா்கள், கடையம் பாரதி இறகுப்பந்து கழக உறுப்பினா்கள் பாராட்டினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.