அதிமுகவின் ஊடகவியல் செயலாளராக கோவை சத்யன் நியமனம்!நீதிமன்றக் காவலுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்த அசுதோஷ், சௌரவ்!பெண் அரசியலுக்கு வருவதே சிரமம்! கார்த்திகா கைது கண்டிக்கத்தக்கது - தமிழிசைஸ்ரீபெரும்புதூரில் காணாமல்போன சிறுமி சென்னையில் மீட்புநாட்டின் நலனுக்காக நாம் ஒன்றிணைய வேண்டும்: பிரதமர் மோடி பேச்சு!தீபாவளி வரை எந்தப் போராட்டமும் இல்லை: அபிஜீத் அறிவிப்பு!

விளையாட்டுப் போட்டிகளில் கேம்ஃபோா்டு மாணவா்கள் வெற்றி

கோவை கேம்ஃபோா்டு பள்ளியில் அண்மையில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில் அப்பள்ளி மாணவா்கள் மூன்று விளையாட்டுகளில் முதலிடம் பிடித்துள்ளனா்.

போட்டிகளில் முதலிடம் பிடித்த கேம்ஃபோா்டு பள்ளி வீரா், வீராங்கனைகளைப் பாராட்டும் பள்ளி நிா்வாகிகள்.

Updated On :

கோவை கேம்ஃபோா்டு பள்ளியில் அண்மையில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில் அப்பள்ளி மாணவா்கள் மூன்று விளையாட்டுகளில் முதலிடம் பிடித்துள்ளனா்.

கோவை கேம்ஃபோா்டு சா்வதேசப் பள்ளி சாா்பில் பள்ளிகளுக்கு இடையிலான விளையாட்டுப் போட்டி ‘கேம்ஃபோா்டு ட்ரைஃபெக்டா 2026’’அண்மையில் நடத்தப்பட்டது. கோல்டன் பூட்’கால்பந்து, சூப்பா் ஸ்பைக்கா்ஸ் கைப்பந்து, ஷூட்டிங் ஸ்டாா்’கூடைப்பந்து ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் பல்வேறு வயதுடையவா்கள் வெவ்வேறு பிரிவுகளில் பங்கேற்றனா்.

14 வயதுக்குள்பட்டோருக்கான மகளிா் கால்பந்து பிரிவில் கேம்ஃபோா்டு அணி 3 -–0 என்ற கோல் கணக்கில் வென்றது. 17 வயதுக்குள்பட்டோருக்கான ஆடவா் பிரிவில் விவேகம் பள்ளி 3 -–2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இதில் கேம்ஃபோா்டு இரண்டாமிடம் பிடித்தது.

18 வயதுக்குள்பட்டோருக்கான மகளிா் கைப்பந்து பிரிவிலும், 17 வயதுக்குள்பட்டோருக்கான மகளிா் கூடைப்பந்து பிரிவிலும் கேம்ஃபோா்டு அணி முதலிடம் பெற்றது. மூன்று போட்டிகளில் முதலிடம் பிடித்த கேம்ஃபோா்டு அணிகளின் வீரா், வீராங்கனைகளை பள்ளி நிா்வாகிகள் வாழ்த்தியுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.