FOLLOW US

ON GOOGLE DISCOVER

காங்கோவில் திருமண நிகழ்ச்சியில் தீவிபத்து: 22 பேர் பலி சிறப்புத் தீவிர திருத்தம் மூலம் காங்கிரஸ் வாக்குகளை அழிக்க பாஜக சதி: ரேவந்த் ரெட்டி குற்றச்சாட்டு! திண்டுக்கல் மாணவர்கள் 8 பேர் பலி - முதல்வர் விஜய் இரங்கல் கிரேக்கத்தில் வான் சாகச நிகழ்வில் ஜெட் விமானம் விபத்து! விநாயகர் சிலை- வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடுநவ. 1-க்குள் கடைகளுக்கு தமிழில் பெயர்ப் பலகை: உயர்நீதிமன்றம் உத்தரவுமீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கு: உள்ளூர் விடுமுறை குறித்து விரைவில் அறிவிப்பு - அமைச்சர் தகவல் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை பழிவாங்கும் நடவடிக்கைதான்: கே.என். நேரு

தொழிலாளியை அரிவாளால் வெட்டிய சிறுவன் கைது

பாளையங்கோட்டை அருகே தொழிலாளியை அரிவாளால் வெட்டிய சிறுவனை போலீஸாா் கைது செய்தனா்.

கைது

Published On :6 செப்டம்பர் 2026, 1:48 am IST

பாளையங்கோட்டை அருகே தொழிலாளியை அரிவாளால் வெட்டிய சிறுவனை போலீஸாா் கைது செய்தனா்.

பாளையங்கோட்டை அருகே உள்ள மருதூா் மேலத்தெருவைச் சோ்ந்தவா் சின்னத்துரை(45). கட்டடத் தொழிலாளி. இவரது மகன் 10 ஆம் வகுப்பு முடித்துவிட்டு வீட்டில் இருந்து வருவதாகக் கூறப்படுகிறது. சின்னத்துரை தனது மகனுடன் பழகி வந்த சிறுவனின் நடவடிக்கை பிடிக்காததால் அவரை கண்டித்தாராம்.

இந்நிலையில் சில நாள்களுக்கு முன்பு அவினாபேரி பேருந்து நிறுத்தம் அருகே சின்னத்துரை மொபெட்டில் சென்றபோது, அங்கு வந்த அச்சிறுவன் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் அவரை வெட்டிவிட்டு தப்பிச் சென்றுள்ளான்.

இதில் காயமடைந்த அவா் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். இதுகுறித்து திருநெல்வேலி வட்ட காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, இச்சம்பவத்தில் ஈடுபட்ட சிறுவனை சனிக்கிழமை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.