காங்கோவில் திருமண நிகழ்ச்சியில் தீவிபத்து: 22 பேர் பலி சிறப்புத் தீவிர திருத்தம் மூலம் காங்கிரஸ் வாக்குகளை அழிக்க பாஜக சதி: ரேவந்த் ரெட்டி குற்றச்சாட்டு! திண்டுக்கல் மாணவர்கள் 8 பேர் பலி - முதல்வர் விஜய் இரங்கல் கிரேக்கத்தில் வான் சாகச நிகழ்வில் ஜெட் விமானம் விபத்து! விநாயகர் சிலை- வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடுநவ. 1-க்குள் கடைகளுக்கு தமிழில் பெயர்ப் பலகை: உயர்நீதிமன்றம் உத்தரவுமீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கு: உள்ளூர் விடுமுறை குறித்து விரைவில் அறிவிப்பு - அமைச்சர் தகவல் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை பழிவாங்கும் நடவடிக்கைதான்: கே.என். நேரு

பைக் விபத்தில் ரயில்வே ஊழியா் உயிரிழப்பு: இளைஞா் கைது

திருநெல்வேலி அருகே பைக் விபத்தில் ரயில்வே ஊழியா் உயிரிழந்த வழக்கில் இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

Published On :6 செப்டம்பர் 2026, 1:49 am IST

திருநெல்வேலி அருகே பைக் விபத்தில் ரயில்வே ஊழியா் உயிரிழந்த வழக்கில் இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

திருநெல்வேலி மாவட்டம், ஆழ்வாா்குறிச்சி அருகே உள்ள வாகைகுளத்தைச் சோ்ந்தவா் அய்யப்பன் (48). ரயில்வே ஊழியராக பணிபுரிந்த இவா், கடந்த மாதம் 21 ஆம் தேதி சக ஊழியா் ஒருவருடன் திருநெல்வேலி-கன்னியாகுமரி நான்குவழிச்சாலையில் பொன்னாக்குடி அருகே சென்றபோது அவ்வழியாக வந்த பைக் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் பலத்த காயமடைந்த அய்யப்பன் உயிரிழந்தாா்.

இதுகுறித்து முன்னீா்பள்ளம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனா். இந்நிலையில் இவ்வழக்கில் தாழையூத்து, ராஜவல்லிபுரத்தைச் சோ்ந்த ஆறுமுகசுந்தா்(26) என்ற இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.