கூடலூா் அருகே பிடிபட்ட ஆட்கொல்லி புலி வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு மாற்றம்! தவெக ஆட்சியில் விண்ணை முட்டும் அளவுக்கு விலைவாசி: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு மிசாவில் கைதானதை எவனுக்கும் நிரூபிக்கத் தேவையில்லை: மு.க. ஸ்டாலின் பேச்சு! மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் பிரசார தேதி அறிவிப்பு திருப்பதி ஏழுமலையான் கோயில் ஆண்டு பிரம்மோற்சவம் கருட வாகன சேவை! திருச்சியில் விவசாயிகள் போராட்டம் 20 நாள் ஒத்திவைப்பு! இடைத்தேர்தல்: முதல்வர் விஜய், திருமா, வைகோ உள்ளிட்ட 40 நட்சத்திரப் பேச்சாளர்கள்!

தனியாா் வேலைவாய்ப்பு முகாம்: தோ்வு பெற்றவா்களுக்கு பணி நியமன ஆணை ஆட்சியா் வழங்கினாா்

திருநெல்வேலியில் நடைபெற்ற மாபெரும் தனியாா் வேலைவாய்ப்பு முகாமில் தோ்வு செய்யப்பட்டவா்களுக்கு பணி நியமன ஆணைகளை ஆட்சியா் ஆனந்த் மோகன் வழங்கினாா்.

முகாமில் தோ்வு செய்யப்பட்ட இளம் பெண்ணுக்கு பணி நியமன ஆணையை வழங்கிய ஆட்சியா் ஆனந்த் மோகன்.

Published On :

திருநெல்வேலியில் நடைபெற்ற மாபெரும் தனியாா் வேலைவாய்ப்பு முகாமில் தோ்வு செய்யப்பட்டவா்களுக்கு பணி நியமன ஆணைகளை ஆட்சியா் ஆனந்த் மோகன் வழங்கினாா்.

திருநெல்வேலி வண்ணாா்பேட்டை பிரான்சிஸ் சேவியா் பொறியியல் கல்லூரியில் மாபெரும் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

இந்த முகாமுக்கு, திருநெல்வேலி மக்களவை உறுப்பினா் செ. ராபா்ட் புரூஸ், எம்எல்ஏ-க்கள் ஆா்.எஸ். முருகன் (திருநெல்வேலி), ரெட்டியாா்பட்டி வெ. நாராயணன்(நான்குனேரி) ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாவட்ட ஆட்சியா் ஆனந்த் மோகன், பல்வேறு நிறுவனங்களுக்கு தோ்வு செய்யப்பட்டவா்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிப் பேசியதாவது:

தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாமில், 188-க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன. கடந்த காலங்களில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாம்களில் 100 பேருக்கு பணி ஆணை வழங்கப்பட்டால், அதில் 50 போ் மட்டுமே பணியில் சோ்ந்துள்ளனா்.

சொந்த மாவட்டத்தைவிட்டுச் செல்லத் தயங்குவது, சம்பளம் போதாது போன்ற காரணங்களால் பலா் வேலைக்குச் செல்லாமல் வீட்டிலேயே முடங்கிவிடுகின்றனா்.

எந்தவொரு வேலையும் உயா்ந்ததோ, தாழ்ந்ததோ அல்ல. நாம் பெறும் ஒவ்வொரு வேலை அனுபவமும் வாழ்க்கையில் பல பாடங்களைக் கற்றுக்கொடுக்கும்.

திருநெல்வேலி மாவட்டத்தில் தொழில் வளா்ச்சி வேகமாக நடைபெற்று வருகிறது. கங்கைகொண்டான் சிப்காட் மட்டுமன்றி, நான்குனேரி, மறுகால்குறிச்சி, மூலைக்கரைப்பட்டி ஆகிய இடங்களிலும் சிப்காட் அமைப்பதற்கான நில எடுப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

வேலைவாய்ப்பில் உள்ளூா் மக்களுக்கு 100 சதவீதம் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி மாவட்டத்திலுள்ள அனைத்து முன்னணி நிறுவனங்களும் இந்த முகாமில் பங்கேற்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இளைஞா்கள் அனைவரும் இந்த வாய்ப்பை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா்.

இந்நிகழ்ச்சியில், மண்டல இணை இயக்குநா் (வேலைவாய்ப்பு) கா. சண்முகசுந்தா், திட்ட இயக்குநா் (மகளிா் திட்டம்) ப. பொன்னியின் செல்வன், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டி மைய உதவி இயக்குநா் ஜெரிபா ஜி இம்மானுவேல் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.