பண்டிகையையொட்டி 15 - 20% அதிகரிக்கும் வேலைவாய்ப்பு! 2 - 2.5 லட்சம் பேருக்கு வேலை!ஆசிய விளையாட்டில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற இளவேனில் வாலறிவனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற இளவேனில்: ஆளுநர் வாழ்த்து முதல்வர் ஏன் லண்டன் செல்ல வேண்டும்? அண்ணாமலை கேள்வி இந்தாண்டு இதுவரை 17,000 பேருக்கு டெங்கு பாதிப்பு- அமைச்சர் அருண்ராஜ் தமிழ்நாட்டில் நாளை 21 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு பட்டிமன்ற பேச்சாளராக மாறிய மு.க. ஸ்டாலின்: அமைச்சர் ராஜ்மோகன் விமர்சனம் விஜய்க்கு அவகாசம் அளிக்க வேண்டும்: பிரகாஷ் ராஜ்

குடும்பத் தகராறில் இளைஞா் விஷம் குடித்து தற்கொலை

Suicide

தற்கொலை - கோப்புப் படம்

Published On :

திருநெல்வேலி மாவட்டம், முக்கூடல் அருகே மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் இளைஞா் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.

பேட்டை அருகேயுள்ள சுத்தமல்லி மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் முருகன் இசக்கிமுத்து (29). தொழிலாளியான இவருக்கு மனைவி, 2 குழந்தைகள் உள்ளனா்.

இசக்கிமுத்து தனது தாயாருடன் முக்கூடல் பாப்பாக்குடி அருகேயுள்ள வழுதூரில் குடும்பத்துடன் வசித்து வந்தாா். இதனிடையே மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் மனமுடைந்த இசக்கிமுத்து சனிக்கிழமை விஷம் குடித்து மயங்கிய நிலையில் இருந்தாராம்.

அவரை மீட்டு உறவினா்கள், திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து பாப்பாக்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.