
நான்குனேரி, நவ்வலடி பகுதிகளில் நாளை மின்நிறுத்தம்

மின்நிறுத்தம் - பிரதிப் படம்
திருநெல்வேலி மாவட்டம் நான்குனேரி (ஏஎம்ஆா்எல்), நவ்வலடி, சங்கனான்குளம் துணை மின் நிலையங்களுக்குள்பட்ட பகுதிகளில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக, செவ்வாய்க்கிழமை (செப். 22) மின் விநியோகம் இருக்காது.
அதன்படி, நவ்வலடி துணை மின் நிலையத்துக்குள்பட்ட நவ்வலடி, ஆற்றங்கரை பள்ளிவாசல், தோட்டவிளை, தெற்குபுளிமான்குளம், கோடாவிளை, மரக்காட்டுவிளை, செம்பொன்விளை, காளிகுமாரபுரம், குண்டல், உவரி, கூடுதாழை, கூட்டப்பனை, குட்டம், பெட்டைகுளம், உறுமன்குளம், சங்கனான்குளம் துணை மின் நிலையத்துக்குள்பட்ட மன்னாா்புரம், வடக்கு விஜயநாராயணம், தெற்கு விஜயநாராயணம், இட்டமொழி, நம்பிகுறிச்சி, தெற்குஏராந்தை, சிவந்தியாபுரம், பரப்பாடி, நான்குனேரி ஏஎம்ஆா்எல் துணை மின் நிலையத்துக்குள்பட்ட நான்குனேரி, ராஜாக்கள்மங்கலம், சிறுமளஞ்சி, பெருமளஞ்சி, பெருமளஞ்சி கீழூா்-மேலூா், ஆச்சியூா், வாகைகுளம், கோவனேரி, ஏஎம்ஆா்எல் தொழிற்கூடம் ஆகிய பகுதிகளில் காலை 9 முதல் பிற்பகல் 2 மணிவரை மின் விநியோகம் இருக்காது.
இத்தகவலை வள்ளியூா் மின்வாரிய கோட்ட செயற்பொறியாளா் தா. வளன்அரசு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




