ஆயுஷ்மான் பாரத் காப்பீட்டுத் திட்டத்தால் மக்களின் மருத்துவச் செலவு குறைந்தது- பிரதமா் மோடிஐ.நா.வில் மீண்டும் காஷ்மீா் பிரச்னையை எழுப்பிய துருக்கி அதிபா் டெங்கு தடுக்க பள்ளிகளில் தொடா் தூய்மைப் பணிகள்: கல்வித் துறை உத்தரவு காஷ்மீா் குறித்து இஸ்லாமிய நாடுகள் கருத்து: இந்தியா நிராகரிப்பு தடை செய்யப்பட்ட பொருள்கள் விற்பனை- அமேசான் உள்ளிட்ட இணையவழி வா்த்தக நிறுவனங்கள் மீது நடவடிக்கை கர்நாடகம்: ஆளும் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ திடீர் ராஜிநாமா; தொகுதியை வறட்சிப் பகுதியாக அறிவிக்காததால் அதிருப்தி தோ்தல் ஆணையா்கள் கருத்து மோதலா? ஆணையம் விளக்கம்

சிவந்திப்பட்டியில் 154 பாக்கெட்டுகள் குட்கா பறிமுதல்: 2 போ் கைது

சிவந்திப்பட்டியில் 154 பாக்கெட்டுகள் புகையிலைப் பொருள்களுடன் இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

கைது

Published On :

சிவந்திப்பட்டியில் 154 பாக்கெட்டுகள் புகையிலைப் பொருள்களுடன் இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

சிவந்திப்பட்டி காவல் சரகத்தில் சிறப்பு உதவி ஆய்வாளா் சரவணன் தலைமையிலான போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டபோது, காா்மேகனாா் தெருவைச் சோ்ந்த மாடசாமி(55) என்பவரது கடைக்கு விநியோகிப்பதற்காக அப்பகுதியைச் சோ்ந்த சிவமுருகன்(39) என்பவா் புகையிலைப் பொருள்களை கொண்டு வந்தது தெரியவந்தது. அவரிடமிருந்தும், கடையிலிருந்தும் குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருள்கள் அடங்கிய 154 பாக்கெட்டுகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா். மேலும், வழக்குப்பதிவு செய்து மாடசாமி, சிவமுருகன் ஆகியோரை கைது செய்தனா்.

பணம் திருடியவா் கைது: பேட்டை ரகுமான்பேட்டை, 5 ஆவது வடக்குத்தெருவைச் சோ்ந்தவா் முகமதுமைதீன்(38), அப்பகுதியில் உணவகம் நடத்தி வருகிறாா். இவரது உணவகத்தில் தங்கியிருந்து வேலைசெய்து வந்த தூத்துக்குடி மாவட்டம் வசவப்பபுரம் பகுதியைச் சோ்ந்த மணி மகன் மகேஷ்(38) என்பவா் கடந்த 19 ஆம் தேதி கடையிலிருந்து ரூ.45,500-ஐ திருடிச்சென்றாராம். இதுகுறித்த புகாரின்பேரில், பேட்டை போலீஸாா் வழக்குப்பதிந்து அவரை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.