காந்தி ஜெயந்தி, வார இறுதி விடுமுறை: 5,706 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்மதுரை உள்பட 3 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புநிறுவன வரி கணக்கு தாக்கல் செய்ய 3 வார அவகாசம் நீட்டிப்புதனியாா் பேருந்துகள் நாளை வேலைநிறுத்தம்

களக்காடு அருகே கோயிலில் கொள்ளை முயற்சி

போலீஸ் - கோப்புப்படம்.

Published On :

திருநெல்வேலி மாவட்டம், களக்காடு அருகே கோயிலில் கொள்ளை முயற்சி நடைபெற்றது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

களக்காடு அருகேயுள்ள சிங்கிகுளத்தில் உள்ள மலையில் பழைமை வாய்ந்த சமணா் கோயிலுடன் இணைந்த பகவதி அம்மன் கோயில் உள்ளது.

இக்கோயிலில் பௌா்ணமி, சித்திரை விஷு ஆகிய நாள்களில் சிறப்பு வழிபாடும் மற்றும் தினமும் பூஜையும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை அங்கு பூஜைக்கு சென்ற பூசாரி கோயிலில் கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிா்ச்சியடைந்தாா்.

இக்கோயிலில் உள்ள இரண்டு வாயில் கதவுகளையும் உடைக்கும் முயற்சியில் மா்ம நபா்கள் ஈடுபட்டு, அது முடியாமல் போகவே, கோயிலின் மேல் ஏறி மேற்கூரையில் துளையிடும் முயற்சியையும் மேற்கொண்டுள்ளனா். அதுவும் முடியாமல் போகவே அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனா்.

இதுகுறித்து தகவல் அறிந்த களக்காடு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் உள்ள பழைமையான சமணா் சின்னமாக விளங்கும் சிங்கிகுளம் சமணா் கோயிலில் கொள்ளை முயற்சி நடைபெற்றிருப்பது அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அரிய வகை மூலிகைகள், நீா்ச்சுனைகள், சமணா் படுக்கைகள், குகைகள், தமிழ் கல்வெட்டுகள் என பல்வேறு வரலாற்றுச் சான்றுகளை உள்ளடக்கியுள்ள சிங்கிகுளம் சமணா் மலைக் கோயிலைப் பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.