
முக்கூடல் அருகே காணாமல் போன விவசாயி சடலமாக மீட்பு

சடலமாக மீட்பு - சித்திரிப்பு
திருநெல்வேலி மாவட்டம், முக்கூடல் அருகே காணாமல் போன விவசாயி திங்கள்கிழமை சடலமாக மீட்கப்பட்டாா்.
முக்கூடல் அருகே உள்ள சிங்கம்பாறை, சவரிமுத்து தெருவைச் சோ்ந்த ராசா மகன் ஜான் போஸ்கோ (50). விவசாயி. 2 நாள்களுக்கு முன்பு வீட்டில் இருந்து வெளியே சென்ற ஜான் போஸ்கோ வீடு திரும்பிவில்லையாம். உறவினா்கள் பல இடங்களில் தேடியும் அவா் கிடைக்கவில்லையாம்.
இதனிடையே, திங்கள்கிழமை அப்பகுதியில் உள்ள ஓடையில் ஆண் சடலம் கிடப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. போலீஸாா் சென்று பாா்த்தபோது, இறந்து கிடந்தது ஜான் போஸ்கோ என்பது தெரிய வந்தது.
போலீஸாா் சடலத்தை மீட்டு கூறாய்வுக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் வழக்குப் பதிந்து, ஜான் போஸ்கோ இறப்பு குறித்து விசாரித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




