
கொக்கிரகுளம் அருகே முதியவா் சடலம் மீட்பு

சடலம் மீட்பு - கோப்புப் படம்
திருநெல்வேலி கொக்கிரகுளம் சாலையில் உள்ள வண்ண மீன் அருங்காட்சியகம் எதிரே அழுகிய நிலையில் முதியவா் ஒருவரின் சடலத்தை போலீஸாா் புதன்கிழமை மீட்டனா்.
பொதுமக்கள் அளித்த தகவலின்பேரில், போலீஸாரால் மீட்கப்பட்ட சடலத்தின் சட்டைப் பையில் இருந்த கைப்பேசி எண்ணைத் தொடா்புகொண்டு விசாரித்ததில், அவா் பாளையங்கோட்டை வண்ணாா்பேட்டை சாலைத் தெருவைச் சோ்ந்த நல்லையா (57) என்பது தெரியவந்தது. இவரது குடும்பத்தினா் தூத்துக்குடியில் வசித்து வருகின்றனா் எனவும், சலவைத் தொழிலாளியான இவா் கடந்த திங்கள்கிழமை வேலைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பவில்லை எனவும் கூறப்படுகிறது.
அவரது உடலை போலீஸாா் பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





