மனதை ஒருமுகப்படுத்த ஆன்மிகமே சிறந்தது: இசையமைப்பாளர் தேவா

 கன்னியாகுமரி, மே 7: மனதை எப்போதும் ஒரு நிலையில் வைக்க ஆன்மிகமே சிறந்தது என இசையமைப்பாளர் தேவா தெரிவித்தார்.  கன்னியாகுமரியில் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை அவர் கூறியதாவது:  1986-ம் ஆ

 கன்னியாகுமரி, மே 7: மனதை எப்போதும் ஒரு நிலையில் வைக்க ஆன்மிகமே சிறந்தது என இசையமைப்பாளர் தேவா தெரிவித்தார்.

 கன்னியாகுமரியில் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை அவர் கூறியதாவது:

 1986-ம் ஆண்டு "மாட்டுக்கார மன்னாரு' திரைப்படம் துவங்கி இன்று வரை 470 திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளேன். ஆன்மிகம் தொடர்பாக 350 ஆல்பம் வெளியிட்டுள்ளேன்.

 கடந்த ஆண்டு ஒரு படத்திற்கு மட்டுமே இசையமைக்கும் வாய்ப்பு வந்தது. தற்போது சூரியன் சட்டக்கல்லூரி, ஆறுமுகம், மாட்டுத்தாவணி, சிறைச்சாலை முத்துப்பாண்டி, ஆலங்குடி, மாமல்லன், மூன்றாம் பெüர்ணமி, அரசு, தேடித்தேடி அலைந்தேன், பெரியகுளம் செண்பா, கலைஞரின் புதிய திரைப்படம், மம்முட்டி தமிழில் நடிக்கும் ஒரு படம் உள்ளிட்ட 14 படங்கள் கைவசம் உள்ளன.

 ரீமிக்ஸ் பாடல்கள் படத்தில் ஒரு பாடலை வீண் செய்வதாக உள்ளது. ரீமிக்ûஸ நான் வரவேற்கவில்லை. ரசிகர்கள் விரும்புகிறார்கள் என்பதற்காக ரீமிக்ஸ் பாடல்கள் வருகின்றன.

 ஏ.ஆர்.ரஹ்மான் ஆஸ்கர் விருது பெற்றது மிகுந்த மகிழ்ச்சி. தமிழனுக்கு கிடைத்த பெருமையாக நினைக்கிறேன். இது போன்ற சந்தர்ப்பங்கள், வாய்ப்புகள் கிடைப்பது அரிது.

 மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயிலுக்குச் சென்று அம்மாவை சந்தித்த பின்னர் என் வாழ்வில் பல்வேறு மாற்றங்கள், வளர்ச்சிகள் ஏற்பட்டன.

 ஒவ்வொரு சித்ரா பெüர்ணமிக்கும் அங்கு சென்று விடுவேன். இந்த சித்ரா பெüர்ணமியில் (வெள்ளிக்கிழமை) நாகர்கோவில் கிருஷ்ணன்கோவிலில் அமைந்துள்ள ஆதிபராசக்தி சக்தி பீடத்தில் இருக்க திட்டமிட்டுள்ளேன். கனடா நாட்டினர் தயாரிக்க உள்ள கின்னஸ் சாதனை படம் இம்மாதம் 22-ம் தேதி புதுச்சேரியில் துவங்குகிறது. இப்படத்திற்காக 15 நாட்களில் முடிக்கும் பணியை ஒரு நாளில் முடித்து கின்னஸ் சாதனை செய்ய உள்ளேன். இப்படம் ஜூன் 3-ம் தேதி திரைக்கு வருகிறது.

 மெல்லிசை பாடல்களுக்காக 7 தடவை விருதுகள் பெற்றுள்ளேன். கானா பாடல்களுக்கு விருதுகள் கிடைப்பதில்லை. இசை பயிற்சி நிலையம் ஒன்றினை சென்னை முகப்பேர் பகுதியில் துவங்கியுள்ளோம்.

 அரசியலில் சேரும் எண்ணம் எதுவும் இல்லை. அனைத்துக் கட்சிகளிலும் எனக்கு நண்பர்கள் உள்ளனர். மனதை எப்போதும் ஒரு நிலையில் வைத்திருக்க ஆன்மிகத்தில் அதிக ஈடுபாடு கொண்டுள்ளேன் என்றார் அவர்.

 பேட்டியின் போது கிருஷ்ணன்கோவில் சக்திபீடத் தலைவர் சின்னத்தம்பி உடனிருந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com