புனித வின்சென்ட் பல்லோட்டி பயன்படுத்திய வேதாகமம் நாளை குமரி வருகை
கத்தோலிக்க திருச்சபையில் புரட்சிகரமான சீர்திருத்தங்கள் உருவாக காரணமாக இருந்த, புனித வின்சென்ட் பல்லோட்டி பயன்படுத்திய புனித வேதாகமம் கன்னியாகுமரி மாவட்டத்துக்கு சனிக்கிழமை (செப். 21) வருகிறது.
இந்த வேதாகமம் ரோம் நகரிலிருந்து ஒவ்வொரு நாடாகக் கொண்டு செல்லப்பட்டு, அங்குள்ள கத்தோலிக்க ஆலயங்களில் இறைமக்களின் பார்வைக்கு வைக்கப்படுகிறது.
அதன்படி இந்தியா வந்துள்ள இந்த வேதாகமம், சனிக்கிழமை கன்னியாகுமரி மாவட்டம் வருகிறது. பல்லோட்டின் சபை அருள்பணியாளர்கள் பணியாற்றும் சின்னமுட்டம் கன்னியர் இல்லம், குலசேகரம் புனித அகுஸ்தினார் ஆலயம், களியல் அருள்சகோதர்கள் இல்லம், பேச்சிப்பாறை ஆலயம் ஆகியவற்றில் இந்த வேதாகமம் பார்வைக்கு வைக்கப்படும்.
குலசேகரம் புனித அகுஸ்தீனார் ஆலயத்தில், அருள்பணியாளர் அருள்திரு சிலுவை எட்வின் தலைமையில் வேதாகம வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
