வள்ளியாறு, குழித்துறையாறு புதிய கூட்டுக் குடிநீர்த் திட்டம் வேண்டும்

குமரி மாவட்டத்தில் குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காண வள்ளியாறு, குழித்துறையாற்றில் புதிய கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை உருவாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென குளச்சல் எம்.எல்.ஏ. ஜே.ஜி.பிரின்ஸ் கூறினார்.
Updated on
1 min read

குமரி மாவட்டத்தில் குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காண வள்ளியாறு, குழித்துறையாற்றில் புதிய கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை உருவாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென குளச்சல் எம்.எல்.ஏ. ஜே.ஜி.பிரின்ஸ் கூறினார்.

இதுகுறித்து அவர் சுங்கான்கடையில் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது, குமரி மாவட்டத்திலுள்ள அணைகளும், குளங்களும் தண்ணீர் இல்லாமல் வறண்டு காணப்படுவதால் நிலத்தடிநீர் வற்றி வருகிறது. தொடர்ந்து மழை பெய்யவில்லை என்றால்  மாவட்டத்தில் குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்படும் சூழ்நிலை உருவாகும். மாவட்டத்தில் பெரும்பான்மையான மக்கள் குடிநீரை விலை கொடுத்து வாங்கி வருகிறார்கள். இதற்கு தீர்வு காண, புதிய கூட்டுக் குடிநீர்த் திட்டங்களை உருவாக்க வேண்டும்.

குழித்துறை ஆற்றில் மேலும் ஒரு கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை உருவாக்க வேண்டும். வள்ளியாற்றில் தண்ணீர் வீணாக கடலில் சென்று கலக்கிறது. எனவே வள்ளியாற்றில் தண்ணீரை சேமிக்கும் வகையில், ஒரு தடுப்பணை அமைத்து புதிய கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை உருவாக்க அரசு முன்வர வேண்டும்.

குளச்சல் தொகுதிக்குள்பட்ட குளச்சல் பணிமனையில் 69 பேருந்துகளும், திங்கள்நகர் பணிமனையில் 90 பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகின்றன. ஆனால் இப்பணிமனைகள் அடிப்படை வசதியில்லாமல் உள்ளன. மேலும், பழுதடைந்த  பழைய பேருந்துகளை மாற்றி, புதிய பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பணியாளர்களுக்கு நவீன கழிப்பறை வசதியுடன் ஓய்வறை அமைக்க வேண்டுமென  போக்குவரத்துத் துறை அமைச்சருக்கு மனு கொடுத்துள்ளேன்.

இப்பணிமனையில் இருந்து குக்கிராமங்கள் வழியாக நாகர்கோவில் செல்லும் அரசு நகரப் பேருந்துகளில் உள்ள குறைபாடுகளைக் களைய   பணிமனை மேலாளர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com