நாகர்கோவிலில் அனந்த பத்மநாப நாடார் பிறந்த தின விழா

  இந்திய விடுதலை போராட்ட தளபதி அனந்த பத்மநாப நாடாரின் 316-வது பிறந்த தின விழா நாகர்கோவிலில் திங்கள்கிழமை நடைபெற்றது.

  இந்திய விடுதலை போராட்ட தளபதி அனந்த பத்மநாப நாடாரின் 316-வது பிறந்த தின விழா நாகர்கோவிலில் திங்கள்கிழமை நடைபெற்றது.

 நாகர்கோவில் கஸ்தூரிபா மாதர் சங்க அலுவலகத்தில் காமராஜர் நற்பணி மன்றம் சார்பில் விழா கொண்டாடப்பட்டது. இதற்கு மன்றத்தின் மாநிலத் தலைவர் ஆர். ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார்.

முனைவர் ஆல்பென்ஸ் நதானியேல், தமிழர் நல மன்ற நிறுவனர் கவிஞர் கு. சுயம்புலிங்கம், சான்றோர் சபை தலைவர் சிவநாராயணப் பெருமாள், பாவேந்தர் பட்டறை தலைவர் கேசவ சுப்பையா, குமரித் தமிழ்ச் சங்கத் தலைவர் சஜி குமார், தமிழ்நாடு அன்பர் கழக அமைப்பாளர் சூசை அமலதாஸ், குமரித் தமிழ்வானம் இயக்குநர் செ. சுரேஷ், தமிழாலயம் துணைத் தலைவர் தெய்வநாயகப் பெருமாள், செயலாளர் இனியன்தம்பி, காமராஜர் நற்பணி மன்றத் தலைவர் அலெக்ஸ் உள்ளிட்டோர் கலந்து

கொண்டனர்.

 விழாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

 இந்திய சுதந்திர போராட்ட வீரர் அனந்தபத்மநாப நாடார் பிறந்த இடமான கண்ணணூர் தச்சன்விளையில் நினைவு மண்டபம் அமைக்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.  மேலும் அவரது உருவம் பொறித்த தபால் தலையும், நாணயமும் மத்திய அரசு வெளியிட வேண்டும். அரசு வேலை வாய்ப்பில் அவரது வாரிசுகளுக்கு இடஒதுக்கீடு தர வேண்டும்.

 மார்த்தாண்டத்தில் அவருக்கு முழு உருவச்சிலை அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com