பிரம்மபுரத்தில் குமரி பாலன் நினைவு தினம்

தக்கலை அருகே இந்து இயக்கங்களின் சார்பில் பிரம்மபுரத்தில் முன்னாள் இந்து முன்னணி மாநில இணை அமைப்பாளர் குமரி பாலனின் நினைவு தினம் பயங்கரவாத எதிர்ப்பு தினமாக வெள்ளிக்கிழமை கடைபிடிக்கப்பட்டது

தக்கலை அருகே இந்து இயக்கங்களின் சார்பில் பிரம்மபுரத்தில் முன்னாள் இந்து முன்னணி மாநில இணை அமைப்பாளர் குமரி பாலனின் நினைவு தினம் பயங்கரவாத எதிர்ப்பு தினமாக வெள்ளிக்கிழமை கடைபிடிக்கப்பட்டது

1993 ஆம் ஆண்டு சென்னை ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் 11 பேர் உயிரிழந்தனர். அதில் குமரிபாலனும் ஒருவர். அதன் நினைவாக பல்வேறு இந்து இயக்கங்கள் சார்பில் குமரி பாலனின் நினைவு தினம் பிரம்மபுரத்தில் ஆண்டு தோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. நிகழாண்டு 21 ஆவது நினைவு தினம் பயங்கரவாத எதிர்ப்பு தினமாக கொண்டாடப்பட்டது.

இதையொட்டி கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட பாஜக மற்றும் இந்து இயக்கங்கள், அமைப்புகள் சார்பில் தோவாளை, அகஸ்தீசுவரம், ராஜாக்கமங்கம் , ஆகிய ஒன்றியங்கள், நாகர்கோவில் நகரம் ஆகிய இடங்களில் இருந்து வந்த இரு சக்கர வாகனப் பேரணிகள் அருள்மிகு நாகராஜ கோயிலை வந்தடைந்தன. பின்னர் அங்கிருந்து பேரணியாக புறப்பட்டு குமரி பாலனின் நினைவிடத்தை வந்து அடைந்தன. அதுபோல் மேற்கு மாவட்டத்தில் இருந்து மேல்புறம், முன்சிறை, திருவட்டாறு, குருந்தன்கோடு, தக்கலை ஆகிய ஒன்றியங்களில் இருந்து புறப்பட இரு சக்கர வாகனப் பேரணி பிரம்மபுரம் நினைவிடம் வந்து சேர்ந்தது. பின்னர் பல்வேறு அமைப்புகள் சார்பில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

பின்னர் நடைபெற்ற பயங்கர வாத எதிர்ப்பு தின கூட்டத்துக்கு இந்து முன்னணி மாநில செற்குழு உறுப்பினர் செல்லன் தலைமை வகித்தார். மாநிலத் தலைவர் அரசுராஜா, பாஜக மாவட்டத் தலைவர் சி.தர்மராஜ், முன்னாள் எம்.எல்.ஏ..வேலாயுதன், பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் எம்.ஆர். காந்தி ஆகியோர் பேசினர். பாஜக மாவட்ட பொதுச் செயலர் ப.ரமேஷ், சொக்கலிங்கம், மாவட்டச் செயலர்கள் தங்கப்பன், ஷீபாபிரசாத், துணைத் தலைவர் தேவ், விஸ்வஹிந்து பரிசத் காளியப்பன், கோட்ட அமைப்புச் செயலர் கிருஷ்ணன், நாகர்கோவில் நகர்மன்றத் தலைவர் மீனா தேவ், பத்மநாபபுரம் நகர்மன்ற உறுப்பினர் உண்ணிகிருஷ்ணன், பேரூராட்சித் தலைவர்கள் மகேஸ்வரி முருகேசன்(மண்டைக்காடு), ராதாதங்கராஜ் (குலசேகரம்), கலாகோபாலகிருஷ்ணன் (திருவிதாங்கோடு), புஷ்பரதிமனோகரன் (திர்பரப்பு) பிரசன்னகுமாரி (பொன்மனை) ஆர்.ஆர்.முருகேஷ் (சுசீந்திரம் )சுஜூ.(அருமனை )விஸ்வநாதன் (கீழ்குளம்) மற்றும் பல்வேறு இந்து அமைப்புகளைச் சார்ந்த நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். இந்து முன்னணி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மிசா சோமன் வரவேற்றார். தக்கலை ஒன்றியத் தலைவர் செந்தில்குமார் நன்றி கூறினார்.

குமரி பாலன் நினைவு தினம் மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு குமாரகோவில் சந்திப்பு, பிரம்மபுரம் ஆகிய பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com