ராகுல் காந்தி கைது! தில்லி காவல் நிலையத்தில் கேரள முதல்வர் முற்றுகை!ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி கைது: அமைச்சர் அருண் ராஜ் கண்டனம்வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க அக். 10-ல் சிறப்பு முகாம்ஞானேஷ் குமார் பதவி விலகும் வரை போராட்டம் தொடரும்! ராகுல் காந்திஞானேஷ் குமாருக்கு எதிரான என் கடிதத்துக்கு பதிலளித்த குடியரசுத் தலைவர்! - சிபிஎம் எம்பி தகவல்!தில்லியில் காங்கிரஸார் பேரணியில் தர்னாவில் ஈடுபட்ட ராகுல் காந்தி கைதுஜெம் வீரமணிக்கு அக். 21 வரை நீதிமன்றக் காவல்!

இந்து முன்னணியினர் புத்தன்கடையில் சாலை மறியல்

திருவட்டாறு அருகே வழிப்பாதை மற்றும் கல் மடம் தொடர்பான பிரச்னையில் திங்கள்கிழமை இரவு இந்து முன்னணியினர்  திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Published On :

திருவட்டாறு அருகே வழிப்பாதை மற்றும் கல் மடம் தொடர்பான பிரச்னையில் திங்கள்கிழமை இரவு இந்து முன்னணியினர்  திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருவட்டாறு அருகே புத்தன்கடை பகுதியிலிருந்து தெற்றியோட்டிற்கு செல்லும் வழிப்பாதை உள்ளது. இந்த வழிப்பாதையில் சேதமடைந்த கல் மடம் ஒன்று உள்ளது.

இந்தக் கல்மடம் இருக்கும் இடம் தங்களுக்குச் சொந்தமானது என்றும், அதற்கான ஆதாரங்கள் தங்கள் வசம் இருப்பதாகவும் இந்து முன்னணியினர் கூறி வருகின்றனர். அதேவேளையில் சேதமடைந்த கல் மண்டபம் வழியாக தங்களுக்கு வழிப்பாதை வேண்டுமென்று  ஊர்மக்கள்  கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்தப்  பிரச்னை தொடர்ந்து நீடித்து வரும்  நிலையில் திங்கள்கிழமை இரவு இந்து முன்னணியின் மாவட்டச் செயலர் ரவி தலைமையில் மார்த்தாண்டம்-குலசேகரம் சாலையில்  திடீர் மறியலில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டம் சுமார் 45 நிமிடங்கள் நீடித்தது. இதையடுத்து திருவட்டாறு போலீஸார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

தொடர்ந்து கல்குளம் வட்டாட்சியர் குமாரதாஸ் சம்பவ இடத்துக்கு வந்து இருதரப்பினரிடமும் பேசி, விநாயகர் சதூர்த்திக்குப்பின் இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்தப்படும் என்று கூறியதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.