நாகர்கோவிலில் இருந்து திருச்செந்தூர் செல்லும் பேருந்துகளை நேர் வழியில் இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
முருகனின் அறுபடை வீடுகளின் ஒன்றான திருச்செந்தூர் கோயிலுக்கு, நாகர்கோவிலில் இருந்தும், கேரள மாநிலத்திலிருந்தும் ஏராளமான பயணிகள் தினந்தோறும் செல்கின்றனர்.
இதில், நாகர்கோவிலில் இருந்து புறப்படும் பேருந்துகள் வள்ளியூர், மன்னார்புரம் விலக்கு, இட்டமொழி, சாத்தான்குளம் வழியாக திருச்செந்தூர் சென்று வந்தன.
தற்போது, பேருந்துகள் மன்னார்புரம் விலக்கிலிருந்து ஊருக்குள் சென்று திரும்பி இட்டமொழி வருகின்றன. இதனால் பயண நேரத்தில் சுமார் அரை மணி நேரம் கூடுதாலாக பேருந்தில் செலவிட வேண்டியிருப்பதாக பயணிகள் தெரிவிக்கின்றனர்.
எனவே, நாகர்கோவிலில் இருந்து திருச்செந்தூர் செல்லும் பயணிகளின் நலன் கருதி நாகர்கோவில் - திருச்செந்தூர் செல்லும் பேருந்துகளை முன்பு போலவே இயக்க வேண்டுமென்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.